நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள் ஆகியவற்றுக்கான விடுமுறையினை மே மாதம் 7 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்