பதுளை மாவட்டத்தின் ஆசிரியர் அதிபர்கள் 1/2 நாள் சுகயீன விடுமுறை அறிவித்துவிட்டு 6ஆம் திகதி காலை 10 மணிக்கு பதுளை நகருக்கு அணிதிரண்டு வாருங்கள். என்பதாக அதிபர்கள் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன.
1997 ஆம் ஆண் முதல் இருந்து வருகின்ற ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பா டுகள் தொடர்பில் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதாக பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி 30 ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது. 10164 பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன லீவு அறிவித்துவிட்டு இந்த தொழில் சங்க நடவடிக்கையிவ் ஈடுபட்டதனால் பல பாடசாலைகளின் அன்றாடச் செயற்பாடுகளில் மந்த நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. அரச சேவையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 247,000 என்பதுடன் அதிபர்களின் எண்ணிக்கை 17,000 ஆகும்.
கடந்த 22 வருங்களாக நிலவுகின்ற பீ.சீ.பெரேரா ஆணைகுழுவின் சம்பள முரண்பாட்டினை நீக்கி ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளத்தினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களது பிரதான கோரிகையாக இருந்தது. அத்துடன் அரசியல் பழிவாங்கல் என்ற காரணம் காட்டி வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்களையும் சலுகைகளையும் நீக்குவது, படிவங்களைப் பூர்த்திசெய்வது உள்ளிட்ட பலவகையான அழுத்தம் தரக்கூடிய பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து அவர்களது கற்பித்தலுக்கான நேரத்தினை வழங்குதல், பெற்றோர்களிடம் பணம் சேகரிப்பதனை நிறுத்துதல், தேசிய உற்பத்தியில் 6 % இனை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல், 2016 ஆம் ஆண்டுமுதல் நிறுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் செயற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலிங் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். " எமக்கு 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை கிடைக்கப்பபெற்றது. 1997 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பீ.சீ. பெரேரா சம்பள ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களும் அதிபர்களுக்குமான சம்பள அதிகரிப்பு பிழையானதாகும். இந்த சம்பள அதிகரிப்பு குறித்து பின்னர் கருத்தில் கொள்வதாக குறிப்பிடப்பட்டது. எனினும் அந்த நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர்அிதபர் சம்பள மரண்பாடு கருத்தில்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடிக்கப்படும் என்பதாக 2/97/ III சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறுதான் எமது சம்பள முரண்பாடுகள் ஆரம்பமானது. முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பல வழிகளிலும் போராடினோம். 2008ஆம் ஆண்டு விடைத்தாள்கள் திருத்தும் பணியிலிருந்து விலகினோம். ஒரு மாணவர் உச்ச நீதிமன்றத்தில் விடைதடதாள் திருத்தமை டெர்பில் வழக்கு ஒன்றினை தாக்கல்செய்தார். வழங்கு விசாரணையின் முடிவில் ஆசிரியர் அதிபர்சேவைகளை பொதுச் சேவைகளிலிருந்து வேறுபடுத்தி சம்பளத்தினை தயாரிக்குமாறு அன்று உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும்அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த முரண்பாட்டினை நீக்குவதற்காக 3000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. எனினும் அந்தப் பணம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதியும் டிசம்பர் மாதம் 26ஆம் 27 ஆம் திகதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டோம். அந்த சந்தர்ப்பத்தில் முன்னால் ஜனாதிபதி குழுவொன்றை அமைத்தார். ஆரிசிரியர்அதிபர் சேவையானது தனியான சேவையொன்றாக அமைக்க வேண்டும் என்பதாகவும் அந்த செயற்பாட்டுக்கு போதிய காலம் தேவைப்படுவதனால் அதுவரையில் இடைக்காலச் சம்பளம் ஒன்றினை வழங்குமாறும் அந்தக் குழு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை முன்வைத்தது. அதுவும் இன்றைய தினம் வரைகிடைகப்பெறவில்லை. கடந்த டிசம்பர் மாதம் தற்போதைய கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டோம். ஒரு மாத காலத்துக்குள் இந்த முரண்பாட்டினை தீர்ப்பதாக அவர் குறிப்பிட்டார். மீண்டும் ஜனவரி 21 ஆம் திகதி இன்னும் ஒருகலந்துரையாடல் நடைபெற்றது. எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால சம்பளம் தொடர்பான சுற்றுநிருபத்தினை வௌியிடுமாறு அந்தக் கலந்துரையாடலில் வேண்டுகோள் விடுத்தோம். எனினும் இதுவரையில் எந்த தீர்வும் கிட்வில்லை
அதன்பின்னர் பெப்ரவரி 26 ஆம் திகதி ஒரு நாள் சுகயீன விடுமுறை எடுத்துக்கொண்டு அதன் பின்னர் 27ஆம் திகதி முதல் சட்டப்படி வேலை என்ற அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் அவர்களது பணிகள் காலை 7.30 முதல் 1.30 வரையே இடம்பெற்றது. எனினும் மாணவர்களின் விளையாட்டு மற்றும் கலை தொடர்பான விடயங்களுக்கு பாதகம் ஏற்படாமல் அந்தப் பணிகளில் ஈடுபடத்தீர்மானித்தனர். அத்துடன் மார்ச் 16 முதல் 20 வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கல்வி அமைச்சுக்கு தெரிவித்தோம்.
இவ்வாறதன தொழிற்சங்க நடவடிக்கைளினால் மாணவர்கள் பதிப்புக்குள்ளாகின்றனர். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே பல முறைகள் கல்வி அமைச்சருக்கு முன்னதாகவே தெரியப்படுத்தினோம் எனினும் அவர்கள் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. என்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பாக ஏப்ரல் 6 ஆம் திகதி பதுள்ளை மாவட்டத்திலும் 7 ஆம் திகதி மொணராகல மாவடத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஏற்படுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
லங்காஜொப் இன்ஃபா.