பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ''உதவி நூலகர்"" பதவியில் நிலவும் வெற்றிடத்திற்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதன் கீழ் காணப்படும் மாதிரிப் படிவத்தின் பிரகாரம் தயாரித்த விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் கல்வி/ தொழில் தகைமை சான்றிதழ்களின் அல்லது அனுபவம் பற்றிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் 2021 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 30 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் ''பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே"" எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பதவியை தனது விண்ணப்பத்தை இட்டு அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் குறிப்பிடுதல் வேண்டும்.
0 Comments