>

ad

Sri Lanka Institute of Advanced Technological Education. ~SLIATE UNIVERSITY~ Tamil Guide

இலங்கை தொழில்நுட்பவியல் உயர்கல்வி நிறுவனம் மற்றும் அதனது பாடநெறிகள் குறித்த தகவல்கள் 



அறிமுகம்.

 க.பொ.த உயர் தரம் எழுதிய மாணவர்கள்   தங்களது (Z score) வெட்டுப்புள்ளியினைப் பெற்றுக்கொள்வார்கள். அதனை அடுத்து தங்களது உயர்கல்வியினைத்  தொடர்வதற்காக தங்களுக்கு வழங்கப்படுகின்ற பல்கலைக்கழக குறிப்பேடுகளை ஆராய்ந்து  தமக்கு ஏற்ற பல்கலைக்கழகத்துக்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய ஆரம்பிப்பார்கள்.  எனினும் துரதிஷ்ட வசமாக இவ்வாறு விண்ணப்பிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைகக்கழகப் பிரவேசம் கிடைத்துவிடப் போவதில்லை.  

எனவே அடுத்த கட்டமாக இந்த மாணவர்கள் கல்வியல் கல்லூரி நுழைவுக்காவது விணணப்பித்து ஏதாவது ஒரு பாடசாலையில் ஆசியரராகப் பணியாற்றும் வாய்ப்பினையாவது பெற்றுக்கொள்வோம் என்ற அடிப்படையில் கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக் ஆரம்பிப்பார்கள். அத்தகைய கல்லூரிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலாக மாணவர்களுக்கே சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுவதுண்டு. 

எமது நாட்டின்  பல்கலைக்கழகங்களிலும் கல்வியல் கல்லூரிகளிலும்  காணப்படுக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும் குறைந்த இடவசதியுமே இவ்வாறு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாமைக்கான  பிரதான காரணமாகும். இந்த நிலையில் இரண்டு வருடங்கள் உயர் தரம் கற்று உரிய முறையில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக கனவுகளை நனவாக்கிக்கொள்ளவற்கான மாற்றீடுகள் ஏதும் இருக்கின்றதா என்பதாக மாணவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்வதுண்டு.

பண வசதியுள்ள குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் தங்களது பெற்றோரிடம் பணம் பெற்று பல வகையான பட்டப்படிப்புகள்  டிப்லோமாக் கற்கை நெறிகள் என உள்நாட்டு நிறுவனங்கிளிலும் வௌிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும்  பயின்று ஏதோ ஒரு வழியில் தங்களது உயர்கல்விக் கனவுகளை அடைந்துகொள்ள முயற்சிக்கினறனர். சிலர் இந்த முயற்சியில் வெற்றி கண்டுவிடுவதுடன் இவர்களில் பலர் அங்கீகாரமற்ற பல்கலைக்கழக பட்டப்படிப்புச் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே அறியாமல் இருந்துவிடுவதுண்டு. 

இவர்களின் நிலை இவ்வாறிருக்க  ஏழைக் குடும்பங்களில் பிறந்து மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் மேலதிக வகுப்புக்காளுக்காக பணம் கொடுத்து உயர்தரம் கற்று குறித்த பரீட்சையிலும் சித்திடைந்து பல்கலைக்கழகத்திற்கான வெட்டுப்புள்ளி போதாமல்  தங்களது உயர்கல்விக் கனவுகளை நனவாக்கிக்கொள்ள வழிகளே இல்லையா ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். 

இவை தவிற 

"கணிதப் பிரிவில் உயர் தரம் கற்றேன் ஒரு பொறியியலாளராவேண்டும் என்பதாக கனவுடன் இருந்தேன். எனினும் பல்கலைக் கழக நுழைவுக்கான போதுமான வெட்டுப்புள்ளிகள் கிடைகை்கவில்லை. தனியார் பல்கலைக்கழகங்களில் நுழைவினைப் பெற்றுக்கொள்ள போதுமான பணவசதி எனக்கில்லை."

"வர்த்தகப்பரிவில் உயர்தரம் கற்றேன். கணக்காளர் ஒருவராகவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. எனக்கோ பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஏழைக்குடும்பத்தில் பிறந்த நான் எனது உயர்கல்விக்காக எங்கிருந்து பணம் தேடிக்கொள்வேன்.

என்பதாக புலம்பித் திரிபர்களும் இன்று பரவலாகக் காணமுடிகின்றது

நீங்கள் உயர் தரம் படித்த எந்த பாடத்துறையிலும் (கணிதம், விஞ்ஞானம், வணிகம், கலை) பெற்றுக்கொண்ட வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய இலவசமாகவே உயர்கல்வியினைப் பெற்று அதன் ஊடாக சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிலான உயர்கல்வி நிறுசனங்கள் பல காணப்படுகின்றன.  அவைகுறித்து உங்களைத் தௌிவுபடுத்துவதற்காக  lankajobinfo.com இணையத்தளம் முயற்சிக்கின்றது. அந்த அடிப்படையில் இலங்கையில் இலவச உயர்கல்வி வாய்ப்புக்களை வழங்குகின்ற SLIATE நிறுவனம் குறித்து நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றது. 


 இலங்கையில் உயர் தரப் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு முழு நேரப் பாடநெறிகளை இலவசமாகவும் வார இறுதி நாட்களில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு மிகக் குறைந்த கட்டணமும் அறவிடுகின்ற அடிப்படையிலான டிப்லோமா பாடநெறிகளை     SLIATE  என்ற  அரச நிறுவனம் வழங்கிவருகின்றது. இந்த நிறுவனம் குறித்த முழு விபரங்களை இந்தப் பதிவு ஆராய்விருக்கின்றது.


  SLIATE  நிறுவனம் என்றால் என்ன?  



  Sri Lanka Institutes Of Advance Technological Education என்ற இந்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சின் கீழ் 1995 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க சட்டத்தின் மூலமாக நிறுவப்பட்டு நாடு பூராவும் பல கிளைகளுடன் இயங்கிவருகி்ன்றது.

இந்த நிறுவனத்தின் ஊடாக நாங்கள் பெற்றுக்கொள்ள முடியுமான உயர் கல்வித் தகைமைகள் என்ன? 

NVQ என்பது இன்றைய உலகம் அங்கீகரித்துள்ள ஒரு தொழிற்கல்வி தகைமையாகும். இந்த NVQ தரப்படுத்தலுக்கு அமைவாக பல்கலைக்கழக பட்டப்படிப்பானது  NVQ 7 என்ற தரத்திற்கு சமமானதாக கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில்  Sri Lanka Institutes Of Advance Technological Education நிறுவனம்  NVQ 6 Higher National Diploma (HND)  சான்றிதழ் தரத்திலான பாடநெறிககளை வழங்குகின்றது. இந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு மிக இலகுவாக குறுகிய காலப்பகுதியில் பட்டப்படிப்புச் சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது.  இந்த நிறுவனத்தின் அனைத்து பாடநெறிகளும் ஆங்கில மொழிமூலம் நடைபெறுவதுடன் பாடநெறியின் இறுதி ஆண்டில் தான் பயில்கின்ற பாடநெறியுடன் தொடர்புடைய தொழிற்பயிற்சியொன்று  NAITA நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் வேறு ஒரு நிறுவனத்தில் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. 


NVQ என்றால் என்ன என்ற கட்டுரையினை கீழ்க்குறிப்பிடுகின்ற லிங்கில் கிளிக் செய்து வாசிக்கலாம். 


SLIATE நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

  • அனைத்து பாடநெறிகளும் இலவசமாகவே வழங்கப்டுகின்றன.
  • பட்டதாரிகள் அல்லது குறித்த துறையில் தேர்ச்சி பெற்றவர்களாலேயே பாடநெறிகள் நடாத்தப்படுகின்றதன.
  • தங்குமிட  வசதிகள் காணப்படுகின்றன
  • வாசிகசாலை வசதிகள் உண்டு
  • நிறுவனத்தில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு மகபொல கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன
  • இலவச இணைய வசதி Wi-fi வசதிகள் வழங்கப்டுகின்றது.
  • புகையிரத / பஸ் வண்டிகளுக்கான சீசன் டிக்கட் வழங்கப்படுகின்றது.
  • விளையாட்டுதுறையில் பிரகாசிப்பதற்கான வசதிகள் உண்டு.

அரச பல்கலைக்கழக பட்டங்களும் HND கற்கையும் ஒரே மாதிரியாது என்கின்றார்களே அது எவ்வாறு?

  • GPA System எனும் முறைக்கு அமைய புள்ளிகள் தொகுக்கப்படல்
  • semester முறையில் பரீட்சை நாட்காட்டிகள் அமைக்பப்டுகின்றன.
  • பட்டதாரிகள் மூலமாக பயிற்சி வழங்ப்படுகின்றன
  • மல்டிமீடியா வசதிகள்மற்றும் தகவல் தொழிநுட்ப கூடங்கள் காணப்படுகின்றன

SLIATE நிறுவனத்தில் என்னென்ன பாடநெறிகள் காணப்படுகின்றன?

இந்த நிறுவனம் பல வகையான பாடநெறிகளை வழங்குகின்றது. அவற்றில் சில கீழே குறிப்பிடப்படுகின்றது.

உயர் தேசிய காணக்கியல் டிப்லோமா .Higher National Diploma In Accountancy




(இந்தப் பாடநெறி பட்டம் ஒன்றிற்கு சமமான அந்தஸ்த்துப் பெறுகின்றது. அரசாங்க கணக்காளர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சைக்கான கல்வித் தகைமையாக இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. )

இந்தப் பாடநெறிக்கான கால அளவு 4 வருடங்களாகும்

இரண்டாவது வருட முடிவில் 6 மாதங்கள் கட்டாயப் களப் பயிற்சி ஒன்றினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். Audit firm ஒன்றில் அல்லது ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றின் account section கலப் பயிற்சி பெற்றுக்கொள்ள முடியும். அரசங்க நிறுவனமொன்றில் இந்தப் கலப்பயிற்சி பெறும் போது ஒரு நாளைக்கு 500 கொடுப்பனவு வழங்கப்படும். \இந்த பொடுப்பனவு  நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற அனைத்து பாடநெறிகளுக்கும் பொருந்துவதாய் அமையும்.)

அடுத்த இரண்டு வருடங்கள் கலப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்கின்ற அதே நேரம் வார இறுதி நாட்களில் நிறுவனத்தில் வகுப்புக்களுக்கு சமூகம் தர வேண்டும். 

பாடநெறி முடிவில் கணக்கீட்டுப் பிரிவொன்றில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம். அரச கணக்காளர் சேவையில் இருப்பவர்களில் பலர் இந்த பாடநெறியினைப் பூர்த்திசெய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பாடநெறியினை அம்பாறை, பதுள்ளை, தெஹிவலை, காலி, கம்பஹா. யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை,  குறுணாகலை, திருக்கோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, இரத்னபுரி, சம்மாந்துரை, தங்கல்லை போன்ற நிலையங்களில் பயிலலாம்.

கீழே தரப்ட்டுள்ள பயிற்சி நிலையங்ளின் பெயர்களில் கிளிக் செய்வதன் ஊடாக அந்தப் பயிற்சி நிலையங்களில் காணப்படுகின்ற படநெறிகளின் பட்டியல்களைப் பார்வையிடலாம்..

உயர் தேசிய பொறியியல் டிப்லோமா Higher National Diploma In Engineering





பொறியலாளர் ஒருவராகவேண்டும் என்பதாக கனவு கண்டு பல்கலைக்கழக வாய்பு கிடைக்காத போது தனது கனவினை நனவாக்குவதற்கான மாற்றீடொன்றாக இந்தக் கற்கைநெறியினைக் குறிப்பிடலாம். இந்தப் பிரிவில் தெரிவுசெய்ய முடியுமான பாடநெறி விபரம் கீழ் வருமாறு. 

1.சிவில் பொறியியல் ( Civil Engineering ) 
2. இலத்திரனியல் பொறியியல் ( Electronical Engineering ) 
3. இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering )
4. கட்டிடத் துறை சார்ந்த பொறியியல் (Building Service Engineering)
5. கொன்டிட்டி சேர்வே (Quantity Survey)

இந்தப் பாடநெறிக்கான கால அளவு 3 1/2 வருடங்களாகும்.

இரண்டு வருட முடிவில் 6 மாதங்கள் களப் பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும்.
லபுதுவ, யாழ்ப்பாணம், மட்டக்குளிய, போன்ற இடங்களில் உள்ள SLIATE நிறுவனங்களில் இந்தப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளலாம். 


இந்தப் பாடநெறியின் முடியவில்  Assistant Engineer என்ற பதவியில் தொழில் பெற்றுக்கொள்ளலாம். இது தவிர அரச துறைகளில் இந்த பாடநெறிக்கான பல வகையான தொழில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.


வியாபாரம் மற்றும் நிதி தொடர்பான உயர் தேசிய டிப்லோமா HNDBF 






நிதித் துறையில் பிரகாசிக்கவேண்டும் என்ற உங்களது கனவினை இந்தப் பாடநெறியின் ஊடாக நனவாக்கிக்கொள்ளலாம். நிதித்துறை தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற ஒரே உயர் தேசிய டிப்லோமாவக இந்தப் பாடநெறி மாத்திரமே காணப்படுகின்றது. 

இந்தப் பாடநெறி 2 1/2 வருட கால அளவு கொண்டதாகும்.

இரண்டாவது வருட முடிவில் 6மாத களப் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தப் பாடநெறியினை தெஹிவலை அழைந்திருக்கின்ற  SLIATE நிறுவனத்தில் மாத்திரமே  பயிலலாம்.

வியாபார நிர்வாக உயர் தேசிய டிப்லோமா  Higher National Diploma in Business Administration - HNDBA





வியாபார நிர்வாகத்தில் உயர்கல்வியினைத் தொரடர்வபவர்களுக்கான சிறந்த பாடநெறியாக இதனைக் குறிப்பிடலாம். 

இந்த பாடநெறியின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியுமான தொழல் வாய்ப்புக்களின் பட்டியல் இதோ
1. நிர்வாகத் துறை .
2. வங்கித் துறை 
3.  முகாமைத்துவ துறை 
4 கணக்கீட்டுத் துறை
5. விற்பனைத் துறை
6. கணனித் துறை

வியாபாரம் சம்பந்தமான அனைத்து துறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறியின் காலம் 2 1/2 வருடங்களாகும். 

இரண்டாவதுவருட முடிவில் 6 மாத களப் பயற்சியினைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

தெஹிவலை, காலி, கண்டி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலில் இந்தப் பாடநெறியினைத் தொடரலாம்.


சுற்றுலாத்துறை மற்றும் நலனோம்பல் முகமை உயர் தேசிய டிப்லோமா HNDTHM 




இந்தப் பாடநெறியின் ஊடாக உல்லாசப் பிரயாணத் துறையில் சிறந்த வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

இந்தப்பாடநெறிக்கான கால அளவு 3 வருங்களாகும். 2 1/2 வருடங்கள் கல்விக் கூடத்திலும் அடுத்த 6 மாதங்கள் களப் பயிற்சியும் பெற்றுக்கொள்ள வேண்டும். பாடநெறி முடிவில் பட்டப் படிப்பையும் பட்டப்படிப்பையும் தெடர்வதற்கான Lincoln மற்றும் MSU பல்கலைக்கழகங்கள் சந்தர்ப்பம் வழங்குகின்றன. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியா பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்படி பல்கலைக் கழகங்களை நிர்வகிக்கின்றன. .

இந்தப் பாடநெறியிக்கான தொழில் வாய்ப்புப் பட்டியல் இதோ 

Tourism Department Officer 
Sri lanka port authority and Srilankan Custom
Hotel(management level )
Job in Srilanka Tourism Development Authority(SLTDA)
Transportation Company 
Foreign Sector 
Job In Cruise Ship
Event Management sector 
Tour Operator 
Aviation Service
Cargo Company 
Consultation 

SLIATE  கட்டமைப்பில் வழங்கப்படுகின்ற பாடநெறிகளில் வௌிநாட்டு மொழிகள் தொடர்பான பயிற்சிகளை உள்ளடக்கிய ஒரே பாடநெறியாக இந்தப் பாடநெறிகுறிப்பிடப்படுகின்றது. 

இந்தப் பாடநெறியினனை அம்பாரை, பதுள்ளை,தெஹிவலை​, காலி,யாழ்ப்பாணம், கண்டி,  நாவலபிடிய ஆகிய SLIATE நிறுவனங்களில் தொடரலாம்



உயர் தேசிய விவசாய தொழிநுட்ப டிப்லோம HNDTAgri





விவசாயத்துறையில் பாரிய வரவேற்பினைப் பெறுகின்ற இந்த பாடநெறியாக இதனைக் குறிப்பிடமுடியும்

பாடநெறியானது 3 வருடங்கள் கொண்டதாகும். அத்துடன் ஒருவருட கால கட்டாய களப் பயிற்சியைக்கொண்டிருக்கின்றது. 

இந்தப்பாடநெறியினை அம்பாறை, காலி, கம்பஹா ஆகிய sliate நிறுவனங்களில் தொடரலாம்.


உயர்தேசிய முகாமைத்துவ டிப்லோம HNDM 




முழு நேரமாக 3 வருட கால அளவினைக் கொண்ட இந்த பாடநெறி ஆங்கில மொழி மூலமாக நடத்தப்படுவதுடன் இறுதி வருடத்தில் ஒருவருட களப்பயிற்சினைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

இந்தப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு கீழ் குறிப்பிடப்படும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன

1. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படுகின்ற 4 வருட பட்டமான BMS பாடநெறியின் இறுதி வருடத்தினை மாத்திரம்  பயின்று முகாமைத்துவ விசேட பட்டப்படிப்புக்கான சான்றிதழைப் பெற்றுகொள்ளலாம்.
2. CMA நிறறுவனத்தினால் வழங்ப்படுகின்ற பட்டப்படிப்பின் முதல் இரண்டு மட்டங்களும் இவர்களுக்காக நீக்கப்பட்டு 3 வது மட்டத்திலிருந்துதொடர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. 
03. .IPM  நிறுவனத்தில் FCHRM மற்றும் CCHRM  மட்டங்கள் நீக்கப்பட்டு அடுத்த மட்த்திலிருந்து தொடர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது. 
 4.AAT நிறுவனத்தின் பாடநெறியில் முதல் இரண்டு மட்டங்கள் விடுவிக்கப்படுகின்றது.
5.SLIM நிறுவனத்தின் ஆரம்ப மட்டத்தில் இரண்டுபாடங்கள் விடுவிக்கப்படுகின்றது..

இந்தப் பாடநெறியினை  அம்பாறை பதுள்ளை, தெஹிவலை, காலி, யாழ்ப்பாணம், கண்டி, குறுணாகலை, நாவலபிடிய போன்ற நிலையங்களில் பயிலலாம்.


 ஆங்கில உயர் தேசிய டிப்லோ  HNDE



இது 21/2 வருடகால அளவினைக் கொண்ட பாடநெறியாகும். இந்த பாடநெறியினை வெற்றிபரமாக பூரணப்படுத்துபவர்கள் டிப்லோமா ஆசிரியர் பதவிக்காக விண்ணப்பிக்காலம்.

இந்தப் பாடநெறியினை அம்பாறை, பதுள்ளை, தெஹிவலை, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, குறுணாகலை, திருக்கோணமலை, அனுராதபுரம், மட்டக்களப்பு, நாவலபிடிய, இரத்னபுரி, தங்கல்லை போன்ற நிலையங்களில் தொடரலா



தகவல் தொழிலுநுட்பத்திற்கான உயர் தேசிய டிப்லோமா HNDIT





தகவல் தொழில்நுட்பத்தில் அனைத்துவிடயங்களையும் உள்ளடக்கியுள்ள இந்தப் பாடநெறி  2 1/2 வருட கால அளவிளைக் கொண்டது. தகவல் தொழில்நுட்பத்துறையிலுள்ள தொழில்வாய்ப்புக்கள் இந்தப் பாடநெறியினைப் பூரணப்படுத்தியவர்களுக்காக காணப்படுகின்றது. இணையத்தள உருவாக்கம். மென்பொருள் உருவாக்கம் வலைபின்னல் என சுயதொழிலாகவும் பல துறைகளில் சொந்தமாக சேவை நிறுவனங்களை உருவாக்கிக்கொள்ளலாம். 

இந்தப் பாடநெறியானது அம்பாறை, பதுள்ளை, கொழும்பு, தெஹிவலை, காலி, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, கேகாலை, குறுணாகலை,  திருக்கோணமலை, இரத்னபுரி,தங்கல்லை,  வவுனியா போன்ற நிலையங்கிளல் பெற்றுக்கொள்ளலாம்.


பாடநெறிகளும் அவை நடைபெறுகின்ற  மாவட்டங்களும் சுருக்கமாக கீழே தரப்படுகின்றன

HNDA - Ampara, Anuradhapura, Badulla, Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala, Jaffna, Veyangoda, Trincomalee, Kegalle, Tangalle, Rathnapura, Samanthurai
HNDIT-Agri - Ampara, Galle, Gampaha
HNDBS - Galle, Colombo
HNDBA - Dehiwala, Jaffna, Kandy, Galle
HNDBF – Dehiwala
HND-English - Ampara, Anuradhapura, Badulla, Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala, Jaffna,  Trincomalee, Kegalle, Samanthurai
HNDE Civil - Colombo, Galle, Jaffna
HNDE Electrical - Colombo, Galle, Jaffna
HNDE Mechanical - Colombo, Galle, Jaffna
HNDFT – Gampaha
HNDM - Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy, Galle, Kurunagala
HNDIT - Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy, Kegalle, Kurunagala, Colombo, Galle, Gampaha, Trincomalee
HNDQS- Colombo, Galle
HNDTHM - Badulla, Dehiwala, Jaffna, Kandy, Galle, Nawalapitiya

விண்ணப்பிப்தற்கான தகைமைகள்
க.பொ.த (உ/த) சித்தி
க.பொ.த (சா/த) ஆங்கிலத்தில் திநமைச் சித்தி

2023 ஆம் ஆண்டு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 


ஒன்லைன் விண்ணப்பம் மற்றும் விபரங்கள் -  https://www.lankajobinfo.com/2023/05/sliate-hnd-course-2023.html



அடுத்த பாடநெறிகளுக்காக மாணவர்களைச் சேர்துக்அகொள்வது தொடர்பான விபரங்கள் அரச வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்படும். ககுறித்த தகவல்களை உடனுக்குடன் பெற்றுகொளவதற்கு lankajobinfo.com உடன் இணைந்திருங்கள். 

வட்சப் குழுக்கள்/எமது முகநூல் பக்கம்.