ஒன்லைன் மூலமாக இலவசமாக கற்கை நெறிகளை வழங்குகின்ற இணையத்தளங்கள்.
வீட்டிலிருந்துகொண்டே இணையத்தில் பணம் சம்பதிக்கலாம் என்பதாக அதிக விளம்பரங்களை நாம் கண்டிருப்போம். இவைகளில் பல போலியான தகவல்களாக இருந்தாலும் இணைய வழியல் பணம் சம்பாதிக்கவும் அறிவினை வளர்ப்பதற்கும் பல வழிகள் காணப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் இணையத்தளத்தில் அல்லது யூடியூபில் கடத்திக்கொண்டிருக்கின்ற நேரத்தினை எங்களது திறன்களையும் அறிவுமட்டத்தினையும் விருத்தி செய்துகொள்வதற்காக பயன்படுத்த முடியுமானால் அது எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயன் மிக்கதாக அமையும்.
அந்த வகையில் ஆயிரக்கணக்கான கற்கைநெறிகளை இலவச ஒன்லைன் மூலம் வழங்குகின்ற சர்வதேச தரம் வாய்ந்த இணையத்தளங்கள் சில குறித்து lankajoninfo.com ஆராய்ந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றது.
1. Coursera
தற்போது உலகம் முழுவதும் 77மில்லயன் பயிலுணர்களைக் கொண்டுள்ள 𝗖𝗼𝘂𝗿𝘀𝗲𝗿𝗮 நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்களை அண்மித்திருக்கின்றது. Art & Humanities, Business Studies, Data science, Computer Science, Social Science, IT, Personal Development என்ற அடிப்படையில் சுமார் 5100 க்கும் அதிகமான வகையான பாடநெறிகள் இந்த நிறுவனத்தினால் ஒன்லைன் மூலமாக வழஙக்கப்படுகின்றது. அத்துடன் ஆங்கிலம், பிரென்ச், ஜபனீஸ், தமிழ் எனபல நாடுகளில் பயன்படுத்துகின்ற மொழிகள் தொடர்பான கற்கைகளும் காணப்படுகின்றன.
முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்ற பாடநெறிகள் இருப்பது போன்றே கட்டணம் செலுத்தி கற்க முடியுமான பாடநெறிகளும் இந்த இணையம் ஊடாக வழங்கப்படுகின்றது. கட்டணம் செலுத்திப் பயில்வதற்கான பாடநெறிகளுக்காக Free Trial Period என்ற அடிப்படையில் 5 நாட்கள் தரப்படுகின்றன. இதன் ஊடாக பாடநெறி பொறுத்தமானதா இல்லையா என பரிசீலித்து பொருத்தமானது என்பதாக கருதுவதாயின் மாதாந்தம் ஒரு தொகையினைச் செலுத்தி பாடநெறியினை தொடரலாம்.
ஒன்லைன் கல்வி வழங்கும் இணையத்தளங்களில் மிகவும்பிரபல்யம் பெற்றிருக்கும் இந்தத் தளத்தில் 130,000 இற்கும் அதிகமான விடியோப் பாடநெறிகள் காணப்படுகின்றன. இவற்றில் இலவசமாக வழங்கும் பாடநெறிகள் பணம் கட்டிப் பயில்வதற்கான பாடநெறிகள் என ஏராளமக காப்படுகின்றன. இந்த தளத்தில் பயல்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பது போன்றே திறமையானவர்கள் பாடநெறிகளை வீடியோ வடிவில் உருவாக்கி இந்த தளத்தில் பதிவு செய்யலாம். அதற்கான கொடுப்பனவுகள் உங்களுக்குக் கிடைக்கப்பெறும்.
இந்த இணையதளத்தில் கணனி சார்ந்த பல வகையாக பாடநெறிகள் காணப்படுகின்றன. உதாரணமாக கிரபிக் டிசைனிங் எனும் போது அதுசம்பந்தமான 100 க்கும் மேற்பட்ட வீடியோ பாடநெறிகள் காணப்படுகின்றன. அவைகள் ஊடாக ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக கற்கலாம். இந்த நிறுவனதினால் வௌியிடும்பாடங்கள் அடங்கிய தொகுதிகள் பல இணையத்தளங்களில் பதிவிறக்குவதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
உலகம் முழுவதும் வாழ்கின்ற மாணவர்களில் கணிதம் கற்பது கடினமானது என்ற உணர்வுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த இணையத்தளம் உருவாக்கப்படட்டது. உலகத் தரம் வாய்ந்த கல்வியை அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் இலவசமாக வழங்குவது கான் அகடமியன் முதன்மை நோக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது.
கணிதம்,விஞ்ஞானம், பொறியல் தொடர்பான படங்களை இலசமாக கற்பித்துத்தருவதற்கான ஒரு சிறந்த இணையத்தளமாக Khan Academy இணையளத்தளத்தினைக் குறிப்பிடலாம். கணிதப் பாடத்தைப் பொறுத்த வரையில் பாடசாலைக் கல்வி முதல் உயர்தரம் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான பாடங்கள் நடாத்தப்படுவதுடன் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களுக்காக தரம் பிரிக்கப்பட்ட அடிப்படையில் பாடங்கள் விளக்கப்படுகின்றன.
அதேபோன்று விஞ்ஞானத்துறையில் பௌதீகவியல் இரசாயனவியல் சுகாதாரம் மருத்துவம் மின்னியல் வானியல் பொருளியல் என்ற அடிப்படையல் பலவிதமான பாடங்களை இந்ததளத்தில் காணமுடிகின்றது.
கான் அகடமி இணையத்தளத்தில் பிரவேசித்து உங்களது முகநூல், ஜீமெயல் போன்ற ஏதாவது ஒரு ஐ.டீயின் ஊடாக பதிவு செய்துகொள்ளலாம்.
காண் அகடிமியன் வெப் தளம் தற்போது தமிழ் மொழியிலும் இயங்குவது விசேட அம்சமாகும்.
edX என்பது இலவச கல்வி வழங்கும் இணையத்தளங்களில் பிரபலமான மற்றுமொறரு இணையதளமாகும். பல வகையான பாடநெறிகள் இந்த இணையதளத்தில் காணப்படுவதுடன் பட்டப்படிப்புக்கு சமமான கற்கைநெறிகளும் இந்த இணையத்தளத்தின் மூலமாக இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த இணையத்தின் ஊடாக பரீட்சைக்கு முகம்கொடுக்கவோ அல்லது கற்கைக்கான சான்றிதழ் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்கோ வாய்ப்புக்கள் இல்லை. எனினும் அனைத்து பாடநெறிகளையும் பூரணமாகவே தருகின்றது. அந்த வகையில் ஒரு கற்கைத் துறையின் பூரண அறிவினை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இணையத்தளத்தில் இதுவரை 19 மில்லியன் பயிலுனர்கள் பயில்கின்றனர். சுமார் 3 மில்லியனானவர்கள் இந்த இணையதளத்தின் ஊடாக பாடநெறியினை வெற்றிகரமாக பூரித்திசெய்திருக்கின்றனர். சுமார் 2500 பாடநெறிகளை இந்த இணையதளம் வழங்குகின்றது. இந்த இலவச பாடநெறியினைப் பூர்த்தி செய்தபின்னர் உங்களுக்கு அவசியமாயின் உரிய கட்டணத்தைச் செலுத்தி கற்கைநெறிக்காக சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்
இந்த இணையத்தளத்தில் IT, Languages, Health, Science, Humanities, Business, Math, Marketing, Lifestyle என்ற பிரதாக தலைப்புக்களின் கீழ் படவகையான பாடநெறித் தொகுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது ஒன்லைன் கல்வியினை வழங்குகின்ற மற்றுமொரு இணையத்தளம் என்ற போதிலும் மேலே குறிப்பிடப்பட்ட இணையத்தளங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த அளவிலான கற்கைகளையே இலவசமாக வழங்குகின்றது. எனினும் Creative Art & media, Languages & Cultures, Law, Literature, History, Tech & Coding என்ற அடிப்படையில் பல வித்தியாசமான பாடநெறிகளை கட்டணம் செலுத்திப்படிக்கின்ற வாய்ப்பினை இந்த இணையத்தளம் வழங்குகின்றது. இந்த பாடநெறிகளுக்காகவும் Free Trial Period காலம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்
இணையத்தில் செலவிடுகின்ற நேரத்தினை மேற்படி ஏதாவது ஒரு இணையத்தில் செலவிட்டு எமது திறன்களை வளர்த்துக் கொண்ணமுடியுமாயின் அந்த திறன்களைப் பயன்படுத்து காசு சம்பாதிப்பதற்கான நிறைய வழகளை உங்களால் அடையாளம் காணமுடியும்.
0 Comments