>

ad

பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் மீண்டும் ஒத்திவைப்பு




தற்போதைய கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்து பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு மேலும் இரு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

பல்கலைக்கழகங்களை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களை மீளத் திறக்கும் நடவடிக்கை தாமதமடைந்திருக்கின்றது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் மீண்டும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சகல பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் தற்போதைய சுகாதார நிலையை கருத்திற் கொண்டு இதுபற்றி உபவேந்தர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இதன் போது தெரிவித்தார்.


Source: news.lk

Post a Comment

0 Comments