மொடியூல் இலக்கம் 08
ஆசிரியர் சேவை 2.ii
ஆசிரியர் விணைத்திறன் தாண்டலுக்கு உதவியாக வடிவமைக்கப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பினை
எனும் முகவரியில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்
ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடை தாண்டல்
மொடியூல் கட்டமைப்பு
10. பக்கங்கள் கொண்ட மொடியூல் டவுன்லோட் செய்யலாம்.
01. மொடியூலின் பெயர்:-
கல்வியுடன் தொடர்புடைய கட்டளைச் சட்டங்கள் மற்றும் கல்வியின் வரலாறு
02. நோக்கம் :-
மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் ஏற்கவேண்டிய பொறுப்புக்களும் கடமைகளும் தொடர்பில் செல்வாக்குச் செலுத்துகின்ற சட்டதிட்டங்களை அடையாலம் காணல்.
03. உத்தேச அடைவு
உடல் ரீதியிலும் உள ரீதியிலும் வளர்ச்சியடைகின்ற நிலையில் உள்ளவர்களாக குறிப்பிடப்படுகின்ற மாணவர்கள் தெடர்பில் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய சட்ட ரீதியான பொறுப்புக்கள், கடமைகள் என்பன குறித்து அறிந்துகொள்வதன் ஊடாக மாணவர்கள் அனுபவிக்கக வேண்டிய உரிமைகள் பாதுகாப்படல்.
04. உளளளடக்கம்
4.1 அறிமுகம்
உடல் ரீதியிலும் உள ரீதியிலும் வளர்ச்சியடைகின்ற நிலையில் உள்ளவர்களாக குறிப்பிடப்படுகின்ற மாணவர்கள் அவர்களது குடும்பத்தில், பாடசாலையில், சமூகத்தில் மூத்தவர்களின் அரவணைப்பிலேயே வளர்கின்றார்கள். அவர்களது வளர்ச்சிக்காக சிறு பராயத்தில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை அவர்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவேண்டும். சில மாணவர்களுக்கு இந்த உரிமைகள் கிடைக்கப்பெறாமலேயே இருந்துவிடுகின்றது. சிறுவர்களின் உரிமைகள் அனுபவித்து அவர்கள் வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படும் போது அதன் விளைவாக உடல்ரீதியானதும் உளரீதியானதுமான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான பாதுப்புக்கள் ஏற்படாத அடிப்படையில் சிறுவர்கள் வாழ்வதற்கான உரிமையை சரியான முறையில் வழங்கவேண்டிய ஒரு நிறுவனமாக பாடசாலையைக் குறிப்பிடலாம். பாடசாலையில் கடமையாற்றுகின்ற ஆசிரியைகளிடமும் ஆசிரியர்களிடமும் இந்தப் பொறுப்பு வழங்கப்படுகின்றது. இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காக மாணவர்களின் உரிமைகள் குறித்த சட்டதிட்டங்கள் என்ன என்பதனை ஆசிரியர்கள் அறிந்திருப்பது முக்கியமானதாகும். சிறுவர்களின் உரிமையுடன் தொடர்புடைய சட்ட திட்டங்கள் குறித்து இந்த மொடியூலில் ஆசிரியர்கள் அறிவூட்டப்படுகின்றனர். சிறுவர்களின் உரிமைகளுடன் தொரடர்புடைய சட்டதிட்டங்கள், கட்டளைச் சட்டங்கள், சுற்றுநிருபங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்படுகின்றது.
4.2 உப தலையங்கங்கள்
• சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்கள் என்போர்க்கு இடையிலான தொடர்பினை சட்ட அடிப்படையிலான பார்வையில் ஆராய்வது.
• சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆசிரியரின் வகிபாகத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதுடன் தெடர்புடைய சட்டதிட்டங்கள்.
• கல்வி தொடர்பாகவே அமுலாக்கப்பட்ட கட்டளைச் சட்டங்கள்
• கல்வியுடன் தொடர்புடைய விதிமுறைகளும் சுற்றுநிருபங்களும்
• சிறுவர்களின் உரிமைகளுடன் தெடர்பான பொதுவான சட்டகள்
• சட்டத்தினை அமுல் படுத்துவதனுடன் தொடர்புடைய எண்ணக்கருக்களும் நிறுவனங்களும்
மொடியூல் இலக்கம் 08 PDF பதிவிறக்க
மேலதிக வாசிப்பு
1. அரச சேவை ஆணைக்குழுவின் விதிமுறைகள் அடங்கிய இல 1589/30 மற்றும் 2009.02.20 திகதியடப்பட்ட விசேட வர்த்மானி அறிவித்தல்
2. இலங்கை ஆசிரியர் சேவையின் சேவைப் பிரமாணக் குறிப்பு
3. தாபண விதிக் கோவை
4. நிதிப் பிரமாணம்.