>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
Homeinfoபல்கலைக்கழகங்கள் பதிவு செய்யப்பட்டதா என்பதை எவ்வாறு இனம் காண்பது.

பல்கலைக்கழகங்கள் பதிவு செய்யப்பட்டதா என்பதை எவ்வாறு இனம் காண்பது.

Admin March 02, 2021


பட்டம் பெறும் பல்கலைக்கழகத்தின் பதிவினை உறுதிசெய்துகொள்வதற்கான வழிகாட்டல்



பல்கலைக்கழக பட்டங்களை அதை வழங்கும் முகவர்களை போலியா அல்லது உண்மையா என எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது என பலரும் கேட்கின்றனர். அதற்கு முழுமையான ஒரு வழியில்லை. நிறுவனத்தைப் பொறுத்து சூழ்நிலையைப் பொறுத்து இந்த படிமுறை வேறுபடும். குறிப்பாக போலிப் பட்டியளில் வருபவர்கள் தங்களுடைய பலவீனங்களை அல்லது போலித்தன்மையை மறைப்பதற்கான எல்லா முயற்சியையும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். இன்று இதைப் பாருங்கள் என்று நாம் சொன்னால் அடுத்து அவர்கள் அதை சரிப்படுத்தி விடுவார்கள். ஆனாலும் குறிப்பாக சில வழிகளைச் இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.


1. பட்டங்களுக்கான விளம்பரங்கள் பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடாமல் வந்தால் அதில் சிக்கல் இருப்பதற்கான வாய்ப்பு 90% இருக்கு.

2. UGC இணையதளத்தில் இருக்கும் அந்த இரண்டு இணையதள இனைப்புக்களில் குறித்த பல்கலை இருக்கிறதா எனப் பாருங்கள். முகவர்கள் UGC இன் கடித்த்தை வைத்திருந்தாலும் சில வேளை அது காலாவதியாகி, பல்கலை இணையதளத்திலிருந்து இப்போது நீக்கப்பட்டிருக்கலாம்.

3. UGC இன் கடிதம் பல்கலை உண்மையானது என்பதற்கு மாத்திரமே ஆனால் அது முகவருக்கான அனுமதியில்லை. முகவருக்கான அனுமதியை அவர்கள் பல்கலையுடனான உடன்படிக்கையில் இருக்கும்.

4. சில பல்கலைக்கு தங்களது நாட்டைத்தாண்டி பட்டங்கள் வழங்க அனுமதியில்லை. இதை அந்நாட்டு உயர்கல்விக்கான அரச நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம்.

5. பல்கலையின் உத்தியோக இணையதளத்திற்குச் சென்று பார்வையிடுவதனூடாகவும் அவர்களைத் தொடர்பு கொண்டு பட்டங்கள் பற்றியும் ஏனைய முகவர் தொடர்பான விடயங்கள் பற்றியும் கேட்கலாம்.

6. இணையதளத்தை அவதானமாக தேடிப்பிடிக்க வேண்டும் போலிப் பட்டங்கள் வழங்கும் முகவர்களும் போலியாக இணையதளத்தை செய்து வைத்து
இருப்பார்கள். குறிப்பாக முறையான பல்கலையின் domains அந்நாட்டைக் குறிக்கும் ac.lk, edu.ni, ac.uk, ac.in, edu.mx போன்ற முகவரியுடன் வரும். சிலவேளை இது இல்லாமலும் அனுமதிபெற்ற பல்கலை இருக்கும். அதற்கு குறித்த நாட்டின் உயர் கல்வி தொடர்பான நிறுவனத்தின் பட்டியலில் தேடலாம். அல்லது Wikipedia விலும், IAU , WHED இலும் இணையதள முகவரியை உறுதிப்படுத்தலாம்.

7. முகவரிடம் ஒப்பந்தங்கள் இருந்தால் பார்க்கலாம்.

8. முகவர்கள் தொடர்பாக அவர்களது கூட்டு குழுக்கல் தொடர்பாக காணப்படும் கருத்துக்கள், image , கடந்தகால செயல்பாடுகள் போன்றவை தொடர்பாக தேடிப்பாருங்கள்.

9. பட்டப்படிப்பு இலகுவாக குறுகிய காலத்தில் என்றால் அது போலியாக இருப்பதற்கு அதிக வாய்புள்ளது.

10. ஆங்கில மொழி அல்லது வேறு மொழி மூல பல்கலையில் தமிழில் பட்டப் படிப்பு என்றால் போலியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

11. அரசு அனுமதித்த கற்கைநெறிக்கு மேலதிகமாக ஏதாவது கற்கைநெறிகளை வழங்கினால் அது போலி.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட பாடநெறிகளுக்கான பட்டங்களை வழங்கவே அந்த நாட்டில் அனுமதி பெற்றிருக்கும். ஆனால் அதன் முகவர்கள் இங்கே எல்லாவகையான பட்டங்களும் தருகிறார்கள் என்றால் அது போலியானது.

12. முகவரிடம் கற்கைநெறிகளை நடாத்த வளங்கள் போதியளவு காணப்படுகிறதா என பார்க்கவய வேண்டும். ஆசிரியர் முதல் உற்கடமைப்பு வரை. ஏற்கனவே பாடநெறிகளை முடித்தவர்களிடம் ஆலோசிக்கலாம்.

13. முகவர்களின் இணையதள்ளத்தை ஆய்வு செய்து பாருங்கள் எவ்வளவு பொய் இருக்கிறது அவ்வளவு பட்டமும் போலியாக இருக்கும்.

14. முகவரிடம் சந்தேகங்களை கேட்க தயங்க வேண்டாம். பணம் கொடுத்து படிப்பது நீங்கள். அவர்கள் வியாபாரம் செய்வது பொதுவெளியில் எனவே உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவது கேள்விகளுக்கு தகுந்த பதிலையும் ஆதாரங்கறையும் காட்டுவது அவர்களின் பொறுப்பு.

15. முகவரிடம் பல்கலைக்காண நேரடித்தொடர்பை கேட்டு பெற்றுக்கொளுங்கள். அதை சற்று விடயங்கள் அறிந்த நபரிடமும் விசாரித்துக் கொள்ளுங்கள்.

16. Engineering degree ஐ வழங்க the institution of engineers Sri Lanka வின் அனுமதி வேண்டும். இல்லையேல் உங்களால் இலங்கையில் பொறியியலாளராக வேலை செய்ய முடியாது.

17. LLB மாத்திரம் செய்து சட்டத்தரணியாக முடியாது. Law college விதிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.

18. HND செய்வதற்கு முன் அது TVEC இல் அனுமதி உள்ளதா எந்த NVQ level தரம் உடையது என பார்க்கவும். TVEC இணையதளத்தில் இவை உண்டு.

Mohamed Riyas


எமது முகநூல் பக்கத்திற்கு லைக் இடுங்கள்.

www.facebook.com/LankaJobinfocom-157301272736519


கீழ் குழுள்ள லிங்கின் ஊடாக எமது வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளலாம்.


https://chat.whatsapp.com/Hk69F9LDtFAAdWvh535GiJ
Tags:
info
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template