>

ad

Open Competitive Examination for vacancies of Department of Probation & Childcare Services - Northern Provincial Council - 2021

வடக்கு மாகாண சபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உதவி மேற்றன், இல்லத்தாய், முன்பள்ளி ஆசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போடடிப் பரீட்சை






வடக்கு மாகாண சபையின் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உதவி மேற்றன், இல்லத்தாய், முன்பள்ளி ஆசிரியர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போடடிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என இத்தால்  அறிவிக்கப்படுகின்றது. 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 12.03.2021 ஆகும்.

சம்பள அளவுத்திட்டம்; 27,140 – 10 x 300 - 11 x 350 - 10 x 495 – 10 x 660 – 45,540/=

ஆட்சேர்ப்பு முறை :-

எழுத்துப் பரீட்சையில் சித்தியடைகின்றவர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சைக்கு பரீட்சார்த்திகள் அழைக்கப்படுவர்.  இவ்வறிவித்தலில் கோரப்பட்ட தகைமைகள் யாவும் நேர்முகப் பரீட்சையின்போது பரிசீலிக்கப்படும். தேவையான தகைமைகள் இல்லையெனத் தெரியவந்தால் பதவிக்கு தகைமையீனமாக கருதி இப்பதவிக்கான உரிமைகள் இரத்துச் செய்யப்படும். நேர்முகப்பரீட்சையின் போது சகல தகைமைகளும், ஆவணங்களும் பரிசீலிக்கப்படும். இதன் போது புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாடட்டாது.

கல்வித்தகைமை:-

க.பொ.த (சா/த)ப் பரீட்சையில் மற்றும் உயர் தரப் பீட்சையில் குறிப்பிட்ட பாடங்களில்சித்தி  


வயதெல்லை :-

விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரி 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

பரீட்சைக் கட்டணம் -
விண்ணப்பதாரி வதியும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகமொன்றில் ரூபா 500.00 ஐ “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்” அவர்களின் “3401” என்ற வைப்புக் கணக்கிற்குச் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை விண்ணப்பப் படிவத்தில் உரிய கூட்டினுள் கழராதவாறு ஒட்டி அனுப்புதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் இக்கட்டணம் மீளச் செலுத்தப்படமாட்டாது. இக் கட்டணத்தை வேறு ஏதும் பரீட்சைக்கு மாற்றவும் அனுமதி வழங்கப்படமாட்டாது. 


விண்ணப்பிக்கும் முறை; -

இவ்வறிவித்தலின் இறுதியில் காட்டப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கமைவாக A4 அளவிலான (21செ.மீஒ29செ.மீ) தாளின் 1 முதல் 4.5 வரையான பந்திகள் முதலாம் பக்கத்திலும், 4.6 முதல் 7 வரையான பந்திகள் இரண்டாம் பக்கத்திலும், ஏனையவை மறுபக்கத்திலும் உள்ளடங்கும் வண்ணம் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்தல் வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 05.03.2021 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு,
“செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, 
வடக்கு மாகாணம்,
 இல:393/48, 
கோவில் வீதி, 
நல்லூர், 
யாழ்ப்பாணம்” 
எனும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும்.

07.2 விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021” எனக்குறிப்பிடப்படல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னராக கிடைக்கின்ற விண்ணப்பங்களும், உரிய தகவல்களைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
07.3 விண்ணப்பப்படிவத்தின் நிழற்படப்பிரதியை தம்வசம் வைத்துக் கொள்ளல் பயனுள்ளதாகும். விண்ணப்பத்தின் நிழற்படப்பிரதி மற்றும் முன்னோடிப்பிரதி என்பன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பரீட்சைக்கான அனுமதி அட்டை மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுச் செயலாளர்
அவர்களினால் அனுப்பிவைக்கப்படும். பரீட்சைக்கான அனுமதி அட்டை அனுப்பிவைக்கப்படலானது விண்ணப்பதாரி சகல தகைமைகளையும் கொண்டுள்ளார் எனக்கருதப்படலாகாது.

விபரங்கள்

Advertisement : Tamil / Sinhala
 Application : Tamil / Sinhala