>

ad

“சாத்து சேவிகா” தரம் III பதவிக்கான விண்ணப்பம் கோரல் -வடக்கு மாகாண சபை விண்ணப்ப முடிவுத்திகதி 2021.03.05

 






வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் கீழான அரச முதியோர் இல்லத்தில் காணப்படும் “சாத்து சேவிகா” தரம் III பதவிக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது.

 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2021 ஆகும். 

கல்வித் தகைமைகள் :-

க.பொ.த (சா/த)ப் பரட்சையில் ஒரே அமர்வில் மொழி (தமிழ் / சிங்களம்/ஆங்கிலம்), கணிதம் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன்

க.பொத. (உ/த) பரீ்சையில் ஆகக்குறைந்தது ஒரு(01) பாடத்தில் (பொதுப்பரீட்சை தவிர்த்து) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

தொழில்சார் தகைமை


அரச முதியோர் இல்லத்தில் அல்லது அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஆகக்குறைந்தது ஆறு(06) மாதத்திற்கு குறையாத முதியோர் பராமரிப்பு பயிற்சியை அல்லது ஆறு(06) மாதத்திற்கு குறையாத முதியோர் பராமரிப்பு தொடர்பான சான்றிதழ் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

 வயதெல்லை :-


விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று விண்ணப்பதாரி பதினெட்டு வயதிற்கு (18) குறையாதவராகவும், நாற்பது வயதிற்கு (40) மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 

Advertisement : Tamil / Sinhala
Application : Tamil / Sinhala



Post a Comment

0 Comments