>

ad

Free Government HND Course - Engineering Sciences for National Diploma in Engineering Sciences (NDES)

அரச நிறுவனத்தினால் நடாத்தப்படும் 4 வருட இலவச எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறி

விண்ணப்பப்ப முடிவுத்திகதி 2021 மார்ச் 25 

திறன்  மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் இராஜாங்க அமைச்சு
தேசிய தொழிற்பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை
எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவகம் கட்டுநாயக்க


எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான எந்திரவியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக் கொள்ளல் - 2020/2021 குழு

கட்டுநாயக்கா, எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமா பாடநெறிக்காக எந்திரவியல் விஞ்ஞான விசேட பயிலுநர்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்காக தகுதி வாய்ந்த இலங்கைப் பிரஜைகளிடமிருந்து
இத்தால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாடநெறிகள் விபரம்

சிவில் எந்திரவியல் துறை

1. சிவில்-கட்டட மற்றும் கட்டமைப்பு எந்திரவியல் பாடநெறி
2. சிவில்-பெருவீதி மற்றும் புகையிரத வீதி எந்திரவியல் பாடநெறி
3. சிவில்-நீர் மற்றும் சூழல் எந்திரவியல் பாடநெறி

 மின்சார மற்றும் இலத்திரனியல் எந்திரவியல் துறை

4. மின்சார மற்றும் இலத்திரனியல்-வலை மற்றும் தொடர்பாடல் எந்திரவியல்
பாடநெறி
5. மின்சார மற்றும் இலத்திரனியல் - மின்சக்தி எந்திரவியல் பாடநெறி

இயந்திர எந்;திரவியல் துறை

6. இயந்திர - தன்னியக்க அசைவு எந்திரவியல் பாடநெறி
7. இயந்திர - இயந்திர (உற்பத்தி) எந்திரவியல் பாடநெறி
8. இயந்திர - கடல் எந ;திரவியல் பாடநெறி
9. இயந்திர - கட்டிட சேவைகள் எந்திரவியல் பாடநெறி

 எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவகத்தின  கடல் எந்திரவியல் பாடநெறி, ISO 9001:2015 தகுதிசன்றிதழின் கீழ் நடாத்தப்படும்.

 கடல் எந்திரவியல் பாடநெறியானது, சர்வதேச சமுத்திர ஒன்றியத்தின் ளுவுஊறு-95 மற்றும் 7.04 மாதிரி பாடநெறி மற்றும் அதனோடு தொடர்புடைய கடல் எந்திரவியல் செயல்விளைவு மட்டத்தின; அறிவு, புரிந்துணர்வு மற்றும் தொழிற் தேர்சசி சம்பந்தமான உரிமைக் கட்டளை சார்ந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே, திட்டமிடப்பட்டுள்ளது.


. கல்வித் தகைமைகள் -

க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் இணை கணிதம், பௌதிகவியல், மற்றும் இரசாயன விஞ்ஞானம் ஆகிய மூன்று (03) பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி.
மற்றும்

சகல பாடநெறிகளுக்கும் க.பொ.த. (சா.த) பரீட்சையில் மூன்று தடவைகளுக்கு மேற்படாதவாறு ஆங்கில மொழிக்கு திறமைச் சித்தி.


 வயது


 - 2021.09.30 ஆந் திகதிக்கு வயது 18 வருடங்களுக்குக் குறையாமலும் 25க்கு மேற்படாதவாறும் இருத்தல் அவசியம். அதன் பிரகாரம் 2003.09.30ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1996.09.30ஆந்திகதிக்கு அல்லது அதற்கு பின்னர் பிறந்த நாளைக் கொண்டுள்ளவா்களுக்கு மட்டும் இதற்காக விண்ணப்பிப்பதற்கு தகுதியுண்டு. 

குறிப்பு: கடல் எந்திரவியல் துறைக்காக தெரிவுசெய்யப்படும் போது வயது 20 வருடங்களுக்குக் குறைந்தவர்களுக்கு முனனுரிமை வழங்கப்படும ;.



 

எழுத்துமூல பரீட்சை:-

அடிப்படை தகைமைகளை பூரணப்படுத ;தியுள்ள சகல விண்ணப்பதாரிகளும் ஆங்கில மொழியிலான எழுத்துமூல பரீட்சையொன்றுக்குத் தோற்றல் வேண்டும் இப் பரீட்சையானது கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ளவாறாக பல்தேர்வு வினாத்தாள்கள் இரண்டினை உள்ளடக்கும்.


1. பொது விவேகம ; - காலம் 01 மணித்தியாலம்-100 புள்ளிகள ;
2. தொழில்நுட்ப மற்றும் பொதுத் தேர்வு - காலம் 01 மணித்தியாலம் -100 புள்ளிகள்



இந்த தொழில்நுட்ப மற்றும் பொதுத் தோ்வுகளின் கீழ் உங்களது அறிவு சிவில் எந்திரவியல் , மின் எந்திரவியல், இயந்திர எந்திரவியல், க.பொ.த. (உயர் தர) இணை கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட ;பம் ஆகிய தலைப்புகளின ; கீழ் பரீட்சிக்கப்படுவர்.

2.3 இந்த எழுத்துமூல பரீட்சை கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நடைபெறும் மென்பதுடன் விண்ணப்பதாரிகளினால் தமது விண்ணப்பத்தில் அண்மையிலுள்ள 02 பரீட்சை நிலையங்களைக் குறிப்பிடல் வேண்டும். (இதன் பிரகாரம் இறுதித் தீர்வு பரீட்சைத் திணைக்களத்தினுடையதாகும்)


01 கொழும்பு
02 காலி 
03 இரத்தினபுரி
04 கண்டி 
05 பதுளை
06 குருணாகல் 
07 யாழ்ப்பாணம்
08 மட்டக்களப்பு
09 அநுராதபுரம்


 நிறுவகத்தின் மூலம் நடாத்தப்படுகின்ற பாடநெறிகள்:

இப்பாடநெறிக்கான காலம் நான்கு வருடங்களாகும்.. பாடநெறி ஆரம்பத்தில் ஆங்கில்பாடநெறியொன்று இடம்பெறுவதுடன் அதில் சகல பயிலுநர்களும் கட்டாயமாக பங்குகொள்ள வேண்டும்.


 
விண்ணப்பப்ப முடிவுத்திகதி 2021 மார்ச் 25 

 விண்ணப்பமானது  ‘[email protected]”  எனும் கவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புதல்  வேண்டும்/


.
அரசாங்க உயர் கல்வி நிறுவனமொன்றில் எந்திரவியல் விஞ்ஞான தேசிய டிப்ளோமாவுக்கு சமமான தரத்தினைக் கொண்ட முழுநேர டிப்ளோமா பாடநெறியொன்றினை கற்றுக்கொண்டிருக்கின்றவர்களுக்கும் அல்லது அரசாங்க பல்கலைக்கழகமொன்றில் முழுநேர பட்டப்படிப்பு பாடநெறியொன்றினை பயின்று கொண்டிருப்போருக்கும் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியாது.



 பாடநெறி மொழிமூலம்: ஆங்கிலம்


.1 பாடநெறிக்கு பதிவு செய்யும் நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படும் கட்டணமாக ரூபா 5.000/- அத்துடன்  ரூபா 2500/- திருப்பிச் செலுத்தப்படாத கட்டணமாக செலுத்த வேண்டும்.

. மேலும், க.பொ.த. (சாதாரண தர) மற்றும் க.பொ.த. (உயர் தர) பெறுபேறுகளை உறுதிப்படுததலுக்காக பரீட்சைத் திணைக்களத்துக்குச்; செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்துதல் வேண்டும்.


சமுர்த்தி மானியம் உரித்துடைய குடும்பத்திலிருந்து வரும் அங்கத்தவராக இருப்பின அதற்கு உரிய மூலப் பிரதி (சமுர்த்தி அட்டை மற்றும் கிராம சேவகரினால் விநியோகிக்கப்பட ;டு பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம்) யைகொடுப்பதன் மூலம் திருப்பிச் செலுத்தப்படவுள்ள வைப்புப் பணத்திலிருந்து விலக்குப் பெற முடியும்.

நர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை,
இல. 971, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,
வெலிகட,
இராஜகிரிய.



முழுவிபரங்கள் கீழுள்ள லிங்க்களில் இணைக்கப்பட்டுள்ளது.  விபரங்களை பதிவேற்றி முழுமையாக வாசிக்கவும்.

2021.03.26 ஆம் திகதி வர்த்தமானியிலும் விபரங்களைப் பார்வையிடலாம்.