>

ad

போட்டிப் பரீச்சைகளுக்கான உலக பொது அறிவுத் தகவல்கள். 2020 பெப்ரவரி 1- 7 ஆம் திகதி வரை

01. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விரிவான செய்திகளுக்கு

02. ஜோ பைடன் ஆட்சியில் சௌதி அரேபிய - அமெரிக்க உறவு கசக்க தொடங்குகிறதா?ஏமன் போரில் சௌதி அரேபியாவுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் கடும் போரில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போர் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பட்டினிச் சாவிற்கு இட்டுச் சென்றுள்ளது.
விரிவான செய்தகளுக்கு..



03. கியூபாவின் வரலாற்றில் முதல் முறையாக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தமாக, தன் நாட்டின் பெரும்பாலான தொழில்களில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
விரிவான செய்திகளுக்கு

04. இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை இலங்கை எடுத்திருக்கிறது.
- என்ன நடந்தது?
விரிவான செய்திகளுக்கு


05. ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
விரிவான செய்திகளுக்கு


06. லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கார் விருது பெற்றவரும், கனடா நாட்டின் பழம்பெரும் நடிகருமான கிறிஸ்டோபர் ப்ளூமர் காலமானார். அவருக்கு வயது 91.
விரிவான செய்திகளுக்கு

07. சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன, கேம்ஸ்டாப் என்றால் என்ன என நீங்கள் யோசித்தால் இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது.
விரிவான செய்திகளுக்கு

08. தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டுத் தங்கள் கட்டுப்பாடுக்குள் அரசு வந்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இயங்கும் மியாவாடி செய்தி நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
விரிவான செய்திகளுக்கு


Post a Comment

0 Comments