கல்விமானி இயற்கை விஞ்ஞானங்கள் சிறப்பு நிகழ்ச்சித்திட்டம் (மட்டம் 5/6) 2026/2027
பாடநெறி விளக்கம்:
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தினால் நடத்தப்படும் கல்விமானி இயற்கை விஞ்ஞானங்கள் சிறப்புப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆசிரியர் பதவிகளுக்கு ஆட்கள் சேர்த்துக்கொள்ளும் போது பொதுவாக போட்டிப் பரீட்சை நாடாத்தப்பட்டு அதில் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றவர்களே பதவிக்காக உள்வாங்கப்படுகின்றனர். ஆனால் கல்வியியல் துறையில் பட்டம் பெற்ற ஒருவர் ஆசிரியராக உள்வாங்கப்பட இந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டிய அவசியமில்லை என்பதாக அசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வேறு துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் ஆசிரியர் சேவைக்காக உள்வங்கப்படும்போது இலங்கை ஆசிரியர் சேவையின் 3 I (அ) தரத்திற்கே உள்வாங்கப்டுகின்றனர். ஆனால் கல்வியியல் பட்டம் ஒன்றினைப் பெற்றிருக்கின்ற ஒருவர் நேரடியாகவே இலங்கை ஆசிரியர் சேவையின் 2 II எனும் தரத்தில் நியமனத்தினைப் பெற்றுக்கொள்ளலாம். அந்த அடிப்படையில் நீங்கள் ஆசிரியர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதனை இலக்காகக் கொண்ட ஒருவராக இருப்பீர்களானால் வேறு பட்டங்களை பயில்வதனை விட கல்வியல் பட்டம் ஒன்றினைப் பயில்வது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். சாதாரண பட்டம் பெற்ற ஒருவரிலும் பார்க்க மூன்று வருடங்கள் முன்னதாகவே அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவி உயர் பெற்றுச் சென்றுவிடலாம்.
முக்கிய திகதிகள்
விண்ணப்பம் விநியோகிக்கும் ஆரம்பத் திகதி:
2026 ஜனவரி 15
விண்ணப்ப முடிவுத் திகதி:
2026 பெப்ரவரி 18
அனுமதித் தகைமைகள்
மட்டம் 5 இற்கான அனுமதித் தகைமைகள்:
- திறந்த பல்கலைக்கழகத்தின் B.Sc / B.Ed (இயற்கை விஞ்ஞானங்கள்) மாணவர்களாக இருந்து, மட்டம் 3 மற்றும் 4 இலுள்ள அனைத்து பாடங்களிலும் (60 திறன் மட்டம்) தேர்ச்சி பெற்றிருத்தல்.
- அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து B.Sc. (இயற்கை விஞ்ஞானங்கள்) பட்டம் பெற்றிருத்தல்.
- அல்லது திறந்த பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞானங்கள் பீடத்திலிருந்து விஞ்ஞான டிப்ளோமா பெற்றிருத்தல்.
மட்டம் 5 இலிருந்து விலக்களிப்பு:
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 3 வருட ஆசிரியர் கல்விக் கற்கையினை வெற்றிகரமாக நிறைவுசெய்து விஞ்ஞானம் அல்லது கணித பாடங்களைக் கற்பிப்பதற்கான தேசிய கற்பித்தல் டிப்ளோமாவினைக் கொண்டிருத்தல்.
பாடநெறி விபரங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
ஒன்லைன் (Online) மூலம் மாத்திரம்.
கட்டண விபரம்.
Registration Fee Rs. 500.00
Facility Fee Rs. 2500.00
Library facility Fee Rs. 100.00
Tuition Fees (per credit) - Rs. 3010.00
Teaching Practice Fee
(Practical) Rs. 12,500.00
ஒன்லைனில் விண்ணப்பிக்க
மேலதிக விபரங்கள்
0 Comments