ad

All island Essay and Art competition for School children 2021 - SLDF, and SLCE. - Tamil

இந்தத் தகவலானது சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரமே வௌியிடப்பட்டது. lankajobinfo.com வாசகர்களுக்காக போட்டி நடாத்தும் நிறுனத்தின் அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்துத் தரப்படுகின்றது


இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்களின் கல்லூரி மற்றும் இலங்கை நீரிழிவு சம்மேளனம் ஆகியன இணைந்து கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி ஒன்றினை நடாத்தவிருக்கின்றது.


முடிவுத் திகதி - 2021.10.20

முழு உலகமும் கொவிட் நோய் பரவலுடன் போராட வேண்டியிருப்பதால் 2021 ஆம் ஆண்டு மிகவும் சவாலான வருடமாகக் காணப்படுகின்றது. இந்த நிலை காரணமாக உலகம் முழவதும் பிரதேசங்கள் மூடப்படும் நிலை காரணமாக வாழ்க்கை முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. வாழ்கை முறை என்பது நீரிழிவு போன்ற அடங்கு நிலையில் இருக்கின்ற பலவகையான நோய்களுக்கு முதன்மைக் காரணியாகக் காணப்படுகின்றது.. எனவே ஏதோ ஒரு அடிப்படையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஒன்றினை அமைத்துக்கொள்வது எதிர்காலத்தில் நீரிழிவு நோய் உருவாவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவியாக அமையும் என்பதுடன் உரிய சுகதரார பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைகள் என்பவற்றை அமைத்துக்கொள்வது covid 19 நோயிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவியாக அமையும்.

இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்களின் கல்லூரி மற்றும் இலங்கை நீரிழிவு சம்மேளனம் ஆகியன இணைந்து இந்த வருட நீரிழிவு நோய் தினத்தினை அனுஷ்டிக்குமுகமாக "ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஊடாக கொவிட் 19 மற்றும் நீரிழிவு எற்பவற்றைத் தோற்கடிப்போம்." எனும் கருப்பபொருளில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி ஒன்றினை நடாத்தவிருக்கின்றது.

அனைத்து ஆக்கங்களும் கீழ்க்குறிப்பிடப்படும் விதிமுறைகளுக்கு அமைய பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் srilankadiabetesfederation@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 2021 ஒக்டோபர் மாதம் 20, அல்லது அதற்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும். உரிய தினத்திலிருந்து பிந்திக் கிடைக்கும் ஆக்கங்கள் அல்லது உரிய முறையிலட பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களுடனான ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.

உங்களால் போட்டிக்கு முன்வைக்கப்படுகின்ற ஆக்கங்கள் இலங்கை அகஞ்சுரக்கும் தொகுதி நிபுணர்களின் கல்லூரி மற்றும் இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் உடமையாகும் என்பதுடன்சமூகத்தை அறிவூட்டுவதற்காக குறித்த அனைத்து ஆக்கங்களும் எதிர்காலத்தில் இலத்திரனியல் அடிப்படையில் அல்லது அச்சு அடிப்படையில் பயன்படுத்துவதற்கான உரிமை குறித்த நிறுவனக்கு உரித்துடையதாகும் என்பதைக் கவலனத்தில்கொள்ளவும்.


Chairperson, Sri Lanka Diabetes Federation, c/o Sri Lanka College of Endocrinologists, No.4, Siri Dhamma Mawatha, Colombo 10.


கட்டுரைப் போட்டி / சித்திரப் போட்டிகளுக்கான தலைப்புக்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை ஊடாக கொவிட் 19 மற்றும் நீரிழிவு எற்பவற்றைத் தோற்கடிப்போம்.

நோக்கம் -

நீரிழிவு நோய் போன்ற தொற்றாத நோய்களைத் தடுத்தல் மற்றும் கொவிட் 19 நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளமுடியுமான விடயங்கள்.

வயது மட்டங்கள் -

கனிஷ்டப் பிரிவு - 2022 ஜனவரி 1 ஆம் திகதிக்கு வயது 5 முதல் 10 வரையில்
இடைநிலைப் பிரிவு - 2022 ஜனவரி 1 ஆம் திகதிக்கு வயது 11 முதல் 15 வரையில்
உயர்நிலை பிரிவு - 2022 ஜனவரி 1 ஆம் திகதிக்கு வயது 16 முதல் 18 வரையில்

கட்டுரைப் போட்டி / சித்திரப் போட்டி என்பவற்றுக்கு மேற் குறிப்பிட்ட வயதுகளுக்குரிய பிரிவுகளில் பங்குபற்றலாம்

கட்டுரைகளுக்கான சொற்களின் அளவுகள்.

கனிஷ்டப் பிரிவு - 250 சொற்கள்.
இடைநிலைப் பிரிவு - 1000 சொற்கள்
உயர்நிலை பிரிவு - 1500 சொற்கள்.

விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள்.
  • சித்திரங்கள் மற்றும் கட்டுரைகள் என்பன பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் srilankadiabetesfederation@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாத்திரம் அனுப்பிவைக்கப்படவேண்டும். 
  • கட்டுரைகள் கையெழுத்தில் எழுதப்பட்டு அதனை படம் எடுத்தோ அல்லது ஸ்கேன் செய்தோ / தட்டச்சு செய்து PDF வடிவிலோ JPEG Format இலோ அனுப்பி வைக்கலாம். கட்டுரைகளுக்காக தழிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியினையும் பயன்படுத்தலாம்.
  • சித்திரங்கள் A3 அளவிலான தாளில் வரைந்து அதனை படம் எடுத்தோ அல்லது ஸ்கேன் செய்தோ /  PDF  / JPEG Format  வடிவிலோஅனுப்பி வைக்கவேண்டும். சித்திரம் வரைவதற்கு எந்தவிதமான ஊடகங்கையும் பயன்படுத்தலாம். (உதாரணம். தூரிகை, பெஸ்டல், பென்சில், வோட்டர் கலர், ஒய்ல் பெய்ன்ட்.)
  • ஆங்கங்கள் அனைத்தும் சொந்த ஆங்கங்களாக அமைய வேண்டும் என்பதுடன் அடுத்தவர்களின் ஆக்கங்களாக அமையக்கூடாது. 
  • கட்டுரை , சித்திரம் என்பன தலைப்புக்கு அமைவாக அமைய வேண்டும் என்பதுடன் தலைப்புடன் தொடர்பில்லாத ஆக்கங்கள் நிராகரிக்கப்படும். 
அனைத்துப் போட்டிகளுக்குமான பரிசுகள் 

முதலாவது பரிசு  ரூபா.25,000.00
இரண்டாவது  பரிசு  ரூபா.15,000.00
மூன்றாவது பரிசு ரூபா. 10,000.00

தகவல்கள் மற்றும் விண்ணப்பப்படிவத்தினை கீழ்வரும் லிங்கில் பதிவிறக்கம் செய்யலாம். 






English Detail Preview