வகுப்பறைக் கற்பித்தலுக்குப் புறம்பாக மாணவர்களின் ஆளுமை மற்றும் மென் திறன்களை (Soft Skills) விருத்தி செய்யும் முறையில் கலைத்திட்டம் (Informal Curriculum), இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள், கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யும் சுற்றுநிருப விதிமுறைகள் மற்றும் மறைக் கலைத்திட்டம் குறித்த முழுமையான வழிகாட்டி இதுவாகும். கல்வி அமைச்சின் அறவித்தல்கள் மற்றும் 1982.06.23 ஆந் திகதி கடிதம் / கல்விச் சுற்றுலாக்கள் தொடர்பான 51/2023 இலக்கச் சுற்றுநிருபம் ஆகியவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
1. இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் (Co-Curricular Activities)
முறையான கலைத்திட்டத்திற்கு (வகுப்பறை கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்கு) புறம்பாகப் பாடசாலையில் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் எனப்படும். வலய, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடைபெறும் போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் கருத்தரங்குகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலையில் நடைமுறைப்படுத்தக்கூடிய 8 பிரதான இணைக் கலைத்திட்டத் துறைகள்:
1. பாட ரீதியான கழகங்கள்/சங்கங்கள்: விஞ்ஞான சங்கம், வர்த்தக சங்கம், தமிழ்/ஆங்கில இலக்கிய மன்றம்.
2. சேவை மற்றும் நலனோம்பல் கழகங்கள்: சாரணர் இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம், சூழல் முன்னோடிப் படை.
3. அழகியற் செயற்பாடுகள்: இசை, நடனம், நாடகம், சித்திரம்.
4. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுக்கள்.
5. சமய வழிபாடுகள் மற்றும் விழாக்கள்.
6. சிரமதானப் பணிகள்.
7. தலைமைத்துவப் பயிற்சி முகாம்கள்.
8. கண்காட்சிகள் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள்.
2. பாடசாலைக் கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் நிர்வாக விதிகள்
பாடவிதானத்துடன் தொடர்புடைய விடயங்களை நேரில் கண்டு அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கல்விச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன்போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 1982.06.23 ஆந் திகதிய 2/திரிவ்பா/49 இலக்கமுடைய கடிதத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் இற்றைப்படுத்தப்பட்ட 51/2023 இலக்கச் சுற்றுநிருப விதிமுறைகளுக்கு இணங்கச் செயற்பட வேண்டும்.
சுற்றுலா அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய 9 கட்டாய ஆவணங்கள்:
கோரல் கடிதம் மற்றும் உரிய விண்ணப்பப் படிவம்.
சுற்றுலாவில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முழுப் பெயர்ப்பட்டியல்.
வரவு செலவு மதிப்பீடு (Budget Estimate).
பெற்றோரின் சம்மதம்/விருப்பம் அடங்கிய கடிதங்கள்.
வாகனத்தின் தகுதிச் சான்றிதழ், முழுமையான காப்புறுதிச் சான்றிதழ் (Full Insurance), வருமான உத்தரவுப் பத்திரம், சாரதி மற்றும் உதவியாளரின் அனுமதிப் பத்திரங்கள்.
பிரயாண வழி குறிக்கப்பட்ட வரைபடம் (Route Map).
நிறுவனங்களைப் பார்வையிடுவதாயின் அதற்கான முன் அனுமதிக் கடிதங்கள்.
தங்குமிட வசதிகள் தொடர்பான முழு விபரங்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான அறிக்கை.
கல்விக் களச் சுற்றுலாக்கள் (Educational Field Trips): சாதாரண கல்விச் சுற்றுலா ஆவணங்களுக்கு மேலதிகமாக, இச்சுற்றுலாவின் தேவை, தொடர்புடைய பாட அலகுகள் மற்றும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுடனான தொடர்பு என்பன விண்ணப்பத்தில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சுற்றுலா நிறைவுற்றதும் செய்ய வேண்டியது: கல்விச் சுற்றுலா ஒன்றை நிறைவு செய்த பின்னர், ஒட்டுமொத்த அறிக்கையையும் வரவு செலவு அறிக்கையையும் கோட்டக் கல்விப் பணிமனை / வலயக் கல்விப் பணிமனைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
3. மறைக் கலைத்திட்டம் (Hidden Curriculum) மற்றும் மென் திறன் விருத்தி
பாடசாலையின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் காரணமாக அவர்கள் மத்தியில் உறுதிப்படுத்தப்படுகின்ற விழுமியங்கள் மற்றும் பண்புகளின் தொகுதியே மறைக் கலைத்திட்டம் ஆகும். பாடசாலைக்குக் கௌரவம் செலுத்துதல், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிப்பளித்துக் கதைத்தல், சமய வழிபாடுகளில் ஈடுபடுதல், குறித்த நேரத்திற்குப் பாடசாலைக்கு வருதலும் வெளியேறுதலும் போன்றவை இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
மறைக் கலைத்திட்டம் மூலம் மாணவர்களிடம் விருத்தியாகும் 12 மென் திறன்கள் (Soft Skills):
நேர் சிந்தனை (Positive Thinking) மற்றும் சுய ஊக்கல்
சவால்களுக்கு முகங்கொடுத்தலும் சகிப்புத்தன்மையும்
தீர்மானமெடுக்கும் ஆற்றல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் / முரண்பாட்டு முகாமைத்துவம்
தொடர்பாடல் திறன்கள் மற்றும் ஆளிடைத் தொடர்பு
நெகிழ்வுத் தன்மை (Flexibility)
தலைமைத்துவத் திறன்கள் மற்றும் குழு உணர்வு
பொறுப்பும் வகைகூறலும் (Accountability)
தன்னம்பிக்கையும் சுய ஒழுக்கமும்
சமூக விழுமியங்கள், பல்வகைமையை ஏற்றுக்கொள்ளுதலும் மதித்தலும், பரஸ்பர நேயம் மற்றும் கௌரவம் ஏற்படும் வகையில் செயலாற்றுதல்.
கட்டுரைத் தகவல்: சொல் எண்ணிக்கை: சுமார் 770 சொற்கள் | வாசிப்பு நேரம்: சுமார் 4 நிமிடங்கள்
0 Comments