பல்கலைக்கழகப் பாடநெறிகள் - விஞ்ஞானப் பிரிவு
உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு 75 பாடநெறிகளுக்காக விண்ணப்பிக்க முடியும். அவற்றில் 37 பாடநெறிகள் விஞ்ஞானப் பிரிவுடம் தொடர்புடையவை. 38 பாடநெறிகள் எந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியுமானவை. அவைகளின் விபரம் வருமாறு.
2.2.3.1 மருத்துவம் (Medicine)
- பாடநெறி குறியீடு: 001
- உத்தேச அனுமதி: 2095
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பெளதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் இரண்டு 'C' தரத்தையும் அத்துடன் ஒரு 'S' தரத்தையும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- காலம்: 05 வருடங்கள்
- மருத்துவ கற்கைநெறி பின்வரும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகிறது:
- கொழும்புப் பல்கலைக்கழகம் (கொழும்பு)
- பேராதனைப் பல்கலைக்கழகம் (பேராதனை)
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (யாழ்ப்பாணம்)
- உறுகுணைப் பல்கலைக்கழகம் (கராப்பிட்டிய, காலி)
- களனிப் பல்கலைக்கழகம் (ராகம)
- ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் (கங்கொடவில)
- இலங்கை இரஜரட்ட பல்கலைக்கழகம் (சல்லியபுர, அனுராதபுரம்)
- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (மட்டக்களப்பு)
- இலங்கை வயம்பப் பல்கலைக்கழகம் (குளியாப்பிட்டிய)
- இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் (இரத்தினபுரி)
- மொறட்டுவைப் பல்கலைக்கழகம் (களுத்துறை)
- ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம் (பதுளை)
2.2.3.2 பல் அறுவை சிகிச்சை (Dental Surgery)
- பாடநெறி குறியீடு: 002
- உத்தேச அனுமதி: 130
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- காலம்: 05 வருடங்கள்
- பல்கலைக்கழகங்கள்:
- பேராதனைப் பல்கலைக்கழகம் (பேராதனை)
- ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் (கங்கொடவில)
2.2.3.3 விலங்கு மருத்துவ விஞ்ஞானம் (Veterinary Science)
- பாடநெறி குறியீடு: 003
- உத்தேச அனுமதி: 110
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- காலம்: 05 வருடங்கள்
- பல்கலைக்கழகம்: பேராதனைப் பல்கலைக்கழகம் (பேராதனை)
2.2.3.4 விவசாய தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் (Agricultural Technology & Management)
- பாடநெறி குறியீடு: 039
- உத்தேச அனுமதி: 221
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாடச்சேர்க்கைகளுள் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் அவ் மூன்று பாடங்களிலும் குறைந்தது 'S' தரங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- இரசாயனவியல்; பௌதீகவியல்; மற்றும் உயிரியல்
- இரசாயனவியல்; பௌதீகவியல் அல்லது கணிதம்; உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி விவசாய தொழில்நுட்பமும் முகாமைத்துவம்
- பல்கலைக்கழகம்: பேராதனைப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள்
2.2.3.5 விவசாயம் (Agriculture)
- பாடநெறி குறியீடு: 004
- உத்தேச அனுமதி: 845
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாடச்சேர்க்கைகளுள் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் அவ் மூன்று பாடங்களிலும் குறைந்தது 'S' தரங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- இரசாயனவியல்; பௌதீகவியல்; மற்றும் உயிரியல்
- இரசாயனவியல்; பௌதீகவியல் அல்லது கணிதம்; உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விவசாயத்தில் விஞ்ஞானமாணி மற்றும் விவசாயத்தில் விஞ்ஞான கௌரவமாணி
- பல்கலைக்கழகங்கள்: இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை இரஜரட்டப் பல்கலைக்கழகம், இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள்
2.2.3.6 உணவு விஞ்ஞானமும் போசாக்கும் (Food Science & Nutrition)
- பாடநெறி குறியீடு: 005
- உத்தேச அனுமதி: 165
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாடச்சேர்க்கைகளுள் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் அவ் மூன்று பாடங்களிலும் குறைந்தது 'S' தரங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- இரசாயனவியல்; பௌதீகவியல்; உயிரியல்
- இரசாயனவியல்; பௌதீகவியல் அல்லது கணிதம்; உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி உணவு விஞ்ஞானமும் போசாக்கும்
- பல்கலைக்கழகம்: இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள்
- சிறப்புப் பயிற்சித் துறைகள்: உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், பிரயோக போசாக்கு
2.2.3.7 உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (Food Science & Technology)
- பாடநெறி குறியீடு: 035
- உத்தேச அனுமதி: 220
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் குறைந்தது 'S' சித்தி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கௌரவம்
- பல்கலைக்கழகங்கள்: பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள்
2.2.3.8 ஆயுர்வேத மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் (Ayurveda Medicine and Surgery)
- பாடநெறி குறியீடு: 032
- உத்தேச அனுமதி: 383
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த.(உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்ததது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: ஆயுர்வேத மருத்துவமும் சத்திரசிகிச்சையும் இளமாணி (B.A.M.S)
- பல்கலைக்கழகங்கள்: கொழும்புப் பல்கலைக்கழகம், இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்
- காலம்: 05 வருடங்கள்
- மொழிமூலம்: ஆங்கிலம்
2.2.3.9 யுனானி மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் (Unani Medicine and Surgery)
- பாடநெறி குறியீடு: 033
- உத்தேச அனுமதி: 89
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்ததது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: யுனானி மருத்துவமும் சத்திரசிகிச்சையும் இளமாணி (B.U.M.S)
- பல்கலைக்கழகம்: கொழும்புப் பல்கலைக்கழகம்
- காலம்: 05 வருடங்கள்
- மொழிமூலம்: ஆங்கிலம்
2.2.3.10 சித்த மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் (Siddha Medicine and Surgery)
- பாடநெறி குறியீடு: 036
- உத்தேச அனுமதி: 247
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த.(உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்ததது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: சித்த மருத்துவமும் சத்திரசிகிச்சையும் இளமாணி (B.S.M.S)
- நிறுவனங்கள்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம்
- காலம்: 06 வருடங்கள் [5 கல்வியாண்டு மற்றும் 1 வருட (இறுதி) உள்ளகப் பயிற்சி]
- மொழிமூலம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் - தமிழ், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் - ஆங்கிலம்
2.2.3.11 உயிரியல் விஞ்ஞானம் (Biological Science)
- பாடநெறி இலக்கம்: 006
- உத்தேச அனுமதி: 1683
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றிலும் அத்துடன் பின்வரும் பாடங்கள் ஒன்றிலும் குறைந்தது 'S' தரங்களைப் பெற்றிருத்தல் வேண்டும்:
- விவசாய விஞ்ஞானம்
- உயர் கணிதம்
- கணிதம்
- இணைந்த கணிதம்
- பௌதீகவியல்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி உயிரியல் விஞ்ஞானம்
- பல்கலைக்கழகங்கள்: கொழும்புப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உறுகுணைப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, இலங்கை, தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
2.2.3.12 பிரயோக விஞ்ஞானங்கள் (உயிரியல் விஞ்ஞானம்) [Applied Sciences (Biological Science)]
- பாடநெறி இலக்கம்: 007
- உத்தேச அனுமதி: 425
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றிலும் அத்துடன் பின்வரும் பாடங்கள் ஒன்றிலும் குறைந்தது 'S' தரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்:
- விவசாய விஞ்ஞானம், உயர் கணிதம், கணிதம், இணைந்த கணிதம், பௌதீகவியல்
- பல்கலைக்கழகங்களும் கற்கைநெறிகளும்:
- இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம்: விஞ்ஞான இளமாணி (பிரயோக விஞ்ஞானங்கள்) - சூழல் விஞ்ஞானமும் இயற்கை வளங்கள் முகாமைத்துவமும்
- இலங்கை இரஜரட்ட பல்கலைக்கழகம்: விஞ்ஞான இளமாணி பிரயோக விஞ்ஞானம், இரசாயன விஞ்ஞானம்
- வவுனியா பல்கலைக்கழகம், இலங்கை: விஞ்ஞான இளமாணி சூழலியல் விஞ்ஞானம்
2.2.3.13 சுகாதார விருத்தி (Health Promotion)
- பாடநெறி இலக்கம்: 050
- உத்தேச அனுமதி: 103
- பல்கலைக்கழகம்: இலங்கை இரஜரட்ட பல்கலைக்கழகம்
- காலம்: 3 அல்லது 4 வருடங்கள்
2.2.3.14 தாதியியல் (Nursing)
- பாடநெறி இலக்கம்: 037
- உத்தேச அனுமதி: 573
- முக்கிய தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' தரத்தையும், க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கிலத்தில் 'S' தரத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.
- குறிப்பு: பரீட்சார்த்திகள் 4'10" குறையாத உயரத்தை உடையவராக இருத்தல் கட்டாயம்.
2.2.3.15 மருந்தகவியல் (Pharmacy)
- பாடநெறி இலக்கம்: 051
- உத்தேச அனுமதி: 239
- முக்கிய தகைமைகள்: க.பொ.த. (உ/த) இரசாயனவியலில் 'C', மற்ற பாடங்களில் 'S', மற்றும் க.பொ.த. (சா/த) ஆங்கிலத்தில் 'S'.
2.2.3.16 மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள் (Medical Laboratory Sciences)
- பாடநெறி இலக்கம்: 052
- உத்தேச அனுமதி: 226
- பல்கலைக்கழகங்கள்: பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, உறுகுணை, யாழ்ப்பாணம்.
2.2.3.17 ஊடுகதிர்ப்படமெடுப்பு (Radiography)
- பாடநெறி இலக்கம்: 053
- உத்தேச அனுமதி: 68
- பல்கலைக்கழகம்: பேராதனைப் பல்கலைக்கழகம்
2.2.3.18 இயன்மருத்துவம் (Physiotheraphy)
- பாடநெறி இலக்கம்: 054
- உத்தேச அனுமதி: 111
- பல்கலைக்கழகங்கள்: கொழும்பு, பேராதனை
2.2.3.18 இயன்மருத்துவம் (Physiotheraphy)
- பாடநெறி இலக்கம்: 054
- உத்தேச அனுமதி: 111
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்:
- க.பொ.த. (உ/த) பரீட்சையில் பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் 'S' சித்தி அடைந்திருப்பதுடன் மூன்றாவது பாடமாக கீழ்வரும் பாடங்களில் ஒன்றில், குறைந்தது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்:
- உயிரியல்
- உயர் கணிதம்
- கணிதம்
- இணைந்த கணிதம்
- அத்துடன் க.பொ.த. (சா/த.) பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் 'S' தரத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.
- பல்கலைக்கழகங்கள் (120 திறமைப் பெறுமானங்கள்):
- கொழும்புப் பல்கலைக்கழகம்
- பேராதனைப் பல்கலைக்கழகம்
- முக்கிய குறிப்பு: பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பரீட்சார்த்திகள் க.பொ.த. (சா/த.) மூலச்சான்றிதழின் உரியவாறு உறுதி செய்யப்பட்ட பிரதியினை (Certified Copy) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். இதைச் சமர்ப்பிக்கத் தவறின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
2.2.3.19 உயிரிரசாயனவியலும் மூலக்கூற்று உயிரியலும் (Biochemistry & Molecular Biology)
- பாடநெறி இலக்கம்: 058
- உத்தேச அனுமதி: 80
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல், மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்:
- விஞ்ஞான இளமாணி (3 வருடங்கள்)
- விஞ்ஞான இளமாணி கௌரவம் உயிர்ரசாயனவியலும் மூலக்கூற்று உயிரியலும் (4 வருடங்கள்)
- விஞ்ஞான இளமாணி கௌரவம் மூலக்கூற்று உயிரியலும் உயிர்தொழில்நுட்பவியலும் (4 வருடங்கள்)
- பல்கலைக்கழகம்: கொழும்புப் பல்கலைக்கழகம்
2.2.3.20 கடற்றொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞானம் (Fisheries & Marine Sciences)
- பாடநெறி இலக்கம்: 062
- உத்தேச அனுமதி: 150
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி கடற்றொழில் மற்றும் கடல்சார் விஞ்ஞானம் கௌரவம்
- பல்கலைக்கழகம்: உறுகுணைப் பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
- சிறப்புப் பயிற்சித் துறைகள்: கடற்றொழில் விஞ்ஞானம், நீரியல் வாழ் விருத்தி
- மொழிமூலம்: ஆங்கிலம்
2.2.3.21 சூழல் பேணலும் முகாமைத்துவமும் (Environmental Conservation & Management)
- பாடநெறி இலக்கம்: 055
- உத்தேச அனுமதி: 109
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் குறைந்தது 'S' தரத்தை உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றிலும் மற்றும் மூன்றாவது பாடமாக கீழ்வரும் ஒரு பாடத்திலும் பெற்றிருத்தல் வேண்டும்:
- பௌதீகவியல்
- இணைந்த கணிதம்
- கணிதம்
- விவசாய விஞ்ஞானம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்:
- விஞ்ஞான இளமாணி சூழல் பேணலும் முகாமைத்துவமும் (3 வருடங்கள்)
- சூழல் பேணலும் முகாமைத்துவமும் விஞ்ஞான கௌரவமாணி (4 வருடங்கள்)
- பல்கலைக்கழகம்: களனிப் பல்கலைக்கழகம்
2.2.3.22 விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடித்தலும் (Animal Science & Fisheries)
- பாடநெறி இலக்கம்: 086
- உத்தேச அனுமதி: 74
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஆகக் குறைந்தது மூன்று 'S' தரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்:
- இரசாயனவியல்; உயிரியல்; பௌதீகவியல்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடித்தலும்
- பல்கலைக்கழகம்: பேராதனைப் பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
2.2.3.23 உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகாமைத்துவமும் (Food Production & Technology Management)
- பாடநெறி இலக்கம்: 087
- உத்தேச அனுமதி: 140
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஆகக் குறைந்தது மூன்று 'S' தரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்:
- இரசாயனவியல்; பௌதீகவியல்; மற்றும் உயிரியல்
- இரசாயனவியல்; பௌதீகவியல் அல்லது கணிதம்: உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி உணவு உற்பத்தியும் தொழில்நுட்ப முகாமைத்துவமும் கௌரவம்
- பல்கலைக்கழகம்: இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
- சிறப்புப் பயிற்சித் துறைகள்: கால்நடையும் பறவையின விஞ்ஞானங்களும், நீர்வாழ் ஜந்துகள் வளர்த்தலும் கடற்றொழிலும்
2.2.3.24 விவசாய வள முகாமைத்துவமும் தொழில்நுட்பமும் (Agriculture Resource Management and Technology)
- பாடநெறி இலக்கம்: 093
- உத்தேச அனுமதி: 181
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் பாடச்சேர்க்கைகளுள் ஒன்றை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் அவ் மூன்று பாடங்களிலும் குறைந்தது 'S'தரங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.
- இரசாயனவியல்; பௌதீகவியல்; மற்றும் உயிரியல்
- இரசாயனவியல்; பௌதீகவியல் அல்லது கணிதம்; உயிரியல் அல்லது விவசாய விஞ்ஞானம்
- இரசாயனவியல்; உயிரியல்; விவசாய விஞ்ஞானம் அல்லது கணிதம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி விவசாய வள முகாமைத்துவமும் தொழில்நுட்பமும்
- பல்கலைக்கழகம்: உறுகுணைப் பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
2.2.3.25 விவசாய வணிக முகாமைத்துவம் (Agribusiness Management)
- பாடநெறி இலக்கம்: 094
- உத்தேச அனுமதி: 78
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் குறைந்தது 'S' தரத்தை உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றிலும் மற்றும் மூன்றாவது பாடமாக கீழ்வரும் ஒரு பாடத்திலும் பெற்றிருத்தல் வேண்டும்:
- பௌதீகவியல்
- விவசாய விஞ்ஞானம்
- உணவுத் தொழில்நுட்பம்/உயிர் வள தொழில்நுட்பம்/ விவசாயத் தொழில்நுட்பம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி விவசாய வியாபார முகாமைத்துவம்
- பல்கலைக்கழகம்: உறுகுணைப் பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
2.2.3.26 பசுமைத் தொழில்நுட்பம் (Green Technology)
- பாடநெறி இலக்கம்: 095
- உத்தேச அனுமதி: 72
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்:
- க.பொ.த. (உ/த) பரீட்சையில் குறைந்தது 'S' தரத்தை உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றிலும் மற்றும் மூன்றாவது பாடமாக கீழ்வரும் ஒரு பாடத்திலும் பெற்றிருத்தல் வேண்டும்:
- பௌதீகவியல்
- விவசாய விஞ்ஞானம்
- உணவுத் தொழில்நுட்பம்/உயிர் வள தொழில்நுட்பம்/ விவசாயத் தொழில்நுட்பம்
- மேலதிகமாக, பரீட்சார்த்திகள் க.பொ.த. (சா/த.) பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தது சாதாரண சித்தியை (C) பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி பசுமைத் தொழில்நுட்பம்
- பல்கலைக்கழகம்: உறுகுணைப் பல்கலைக்கழகம்
- காலம்: 4 வருடங்கள்
- முக்கிய குறிப்பு: பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் க.பொ.த. (சா/த.) மூலச்சான்றிதழின் தகுந்த உறுதி செய்யப்பட்ட பிரதியை (Certified Copy) அனுப்ப வேண்டும்.
2.2.3.27 விலங்கு உற்பத்தி மற்றும் உணவுத் தொழில்நுட்பம் (Animal Production & Food Technology)
- பாடநெறி இலக்கம்: 067
- உத்தேச அனுமதி: 108
- அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தியுடன் மூன்றாவது பாடத்தை பின்வரும் நிரலிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும்:
- விவசாய விஞ்ஞானம், உயர் கணிதம், கணிதம், இணைந்த கணிதம், பௌதீகவியல்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி கௌரவ விலங்கு உற்பத்தி மற்றும் உணவுத் தொழில்நுட்பம்
- பல்கலைக்கழகம்: இலங்கை ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.28 ஏற்றுமதி விவசாயம் (Export Agriculture)
- பாடநெறி இலக்கம்: 073
- உத்தேச அனுமதி: 105
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தியுடன் மூன்றாவது பாடத்தை பின்வரும் நிரலிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும்:
- விவசாய விஞ்ஞானம், உயர் கணிதம், கணிதம், இணைந்த கணிதம், பௌதீகவியல்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி ஏற்றுமதி விவசாயம் கௌரவம்
- பல்கலைக்கழகம்: இலங்கை ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
- சிறப்புப் பாடப்பரப்புகள்: பயிர் உற்பத்தித் தொழில்நுட்பம், தொழில் முயற்சியிலான விவசாயம்
2.2.3.29 நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம் (Aquatic Resources Technology)
- பாடநெறி இலக்கம்: 088
- உத்தேச அனுமதி: 114
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தியுடன் மூன்றாவது பாடத்தை பின்வரும் நிரலிலிருந்து தெரிவுசெய்ய வேண்டும்:
- விவசாய விஞ்ஞானம், உயர் கணிதம், கணிதம், இணைந்த கணிதம், பௌதீகவியல்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: விஞ்ஞான இளமாணி நீர்வாழ் வளங்கள் தொழில்நுட்பம் கௌரவம்
- பல்கலைக்கழகம்: இலங்கை ஊவா வெல்லஸ்ஸப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.30 தொழில்வழிச் சிகிச்சை (Occupational Therapy)
- பாடநெறி இலக்கம்: 115
- உத்தேச அனுமதி: 50
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: தொழில்வழிச் சிகிச்சை விஞ்ஞான இளமாணி கௌரவம்
- பல்கலைக்கழகம்: களனிப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.31 பார்வை அளவியல் (Optometry)
- பாடநெறி இலக்கம்: 116
- உத்தேச அனுமதி: 60
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: பார்வை அளவியல் - விஞ்ஞான கௌரவமாணி
- பல்கலைக்கழகம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.32 பிரயோக இரசாயனவியல் (Applied Chemistry)
- பாடநெறி இலக்கம்: 118
- உத்தேச அனுமதி: 60
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் குறைந்தது 'S' தரங்களை இரசாயனவியல் மற்றும் பௌதீகவியல் ஆகிய பாடங்களிலும் மூன்றாவது பாடமாக பின்வரும் நிரலிலுள்ள ஏதேனும் ஒரு பாடத்திலும் பெற்றிருத்தல் வேண்டும்:
- உயிரியல், இணைந்த கணிதம், கணிதம், உயர் கணிதம், விவசாய விஞ்ஞானம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: பிரயோக இரசாயனவியல் விஞ்ஞான கௌரவ இளமாணி
- பல்கலைக்கழகம்: களனிப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.33 சுதேச மருத்துவ வளங்கள் (Indigenous Medicinal Resources)
- பாடநெறி இலக்கம்: 120
- உத்தேச அனுமதி: 70
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் பின்வரும் நிரலிலுள்ள பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்:
- இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், விவசாய விஞ்ஞானம்
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: சுதேச மருத்துவ வளங்களில் கௌரவ விஞ்ஞான இளமாணி
- பல்கலைக்கழகம்: இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.34 நீர்உயிரின வளங்கள் (Aquatic Bioresources)
- பாடநெறி இலக்கம்: 129
- உத்தேச அனுமதி: 50
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்:
- நீர்உயிரின வளங்கள் - விஞ்ஞான இளமாணி (3 வருடங்கள்)
- நீர்உயிரின வளங்கள் - விஞ்ஞான கௌரவமாணி (4 வருடங்கள்)
- பல்கலைக்கழகம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.35 நகர்ப்புற உயிரியல் வளங்கள் (Urban Bioresources)
- பாடநெறி இலக்கம்: 130
- உத்தேச அனுமதி: 50
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களில் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்:
- நகர்ப்புற உயிரியல் வளங்கள் - விஞ்ஞான இளமாணி (3 வருடங்கள்)
- நகர்ப்புற உயிரியல் வளங்கள் - விஞ்ஞான கௌரவமாணி (4 வருடங்கள்)
- பல்கலைக்கழகம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.36 மருத்துவப் படிமவியல் தொழில்நுட்பம் (Medical Imaging Technology)
- பாடநெறி இலக்கம்: 138
- உத்தேச அனுமதி: 50
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் இரசாயனவியல், பௌதீகவியல் மற்றும் உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டம்: மருத்துவப் படிமவியல் தொழில்நுட்பம் - விஞ்ஞானமாணிப் பட்டம்
- பல்கலைக்கழகம்: கொழும்புப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
2.2.3.37 பேச்சு மற்றும் செவித்திறன் விஞ்ஞானங்கள் (Speech and Hearing Sciences)
- பாடநெறி இலக்கம்: 083
- உத்தேச அனுமதி: 75
- அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்:
- க.பொ.த. (உ/த) பரீட்சையில் உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் ஆகக் குறைந்தது 'S' சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- மேலதிகமாக, க.பொ.த. (சா/த.) பரீட்சையில் ஆங்கிலத்தில் குறைந்தது சாதாரண சித்தியை (S) பெற்றிருத்தல் வேண்டும்.
- பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்: விஞ்ஞான இளமாணி கௌரவ பேச்சு மற்றும் செவித்திறன் விஞ்ஞானங்கள்
- பல்கலைக்கழகம்: களனிப் பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள் (ஆங்கில மொழிமூலம்)
- குறிப்பு: பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் க.பொ.த. (சா/த.) மூலச்சான்றிதழின் தகுந்த உறுதி செய்யப்பட்ட பிரதியை (Certified Copy) சமர்ப்பிக்க வேண்டும்.
விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான ஏனைய பொதுவான துறைகள்
க.பொ.த. (உ/த) உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சை தோற்றிய பரீட்சார்த்திகள் பின்வரும் கற்கை நெறிகளுக்கும் அனுமதியை கோரலாம் (தகைமைகளுக்கு உட்பட்டு):
- சட்டம்
- கட்டிடக்கலை
- வடிவமைத்தல்
- நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்
- முகாமைத்துவக் கற்கைகள் (TV)
- தகவல் தொழில்நுட்பம் (IT)
- முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (MIT)
- நகர தகவலியல் மற்றும் திட்டமிடல்
- சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும்
- தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ICT)
- விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
- கணினி விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
- தொழில்முயற்சியும் முகாமைத்துவமும்
- கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
- கனியவளங்களும் தொழில்நுட்பமும்
- முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)
- உடற்கல்வி
- விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்
- விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்வுகள் முகாமைத்துவம்
- தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
- சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும்
- தகவல் முறைமைகள்
- நிலத்தோற்றக் கட்டிடக்கலை
- திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள்
- செயற்றிட்ட முகாமைத்துவம்
- கடல்சார் மற்றும் நன்னீர் விஞ்ஞானம்
- உணவு வணிக முகாமைத்துவம்
- புவியியல் தகவல் விஞ்ஞானம்
- மனித வள மேம்பாடு
- மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்
- சுதேச மருந்தகவியல் தொழில்நுட்பம்
- யோகா மற்றும் மனநல ஆய்வுகள்
- சுதேச அறிவியலின் மீதான சமூகக் கற்கைகள்
- ஆங்கில மொழி மற்றும் பிரயோக மொழியியல்
- ஆற்றல் இசைத் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன்
- பெருந்தோட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம்
- ஆரம்பக் கல்வி
- பாலிமர் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை முகாமைத்துவம்
Source - UGC university handbook 2025
0 Comments