பல்கலைக்கழகப் பாடநெறிகள் - வணிகவியல் பிரிவு (Commerce Stream)
2.2.2 வணிகவியல் பிரிவு (Commerce Stream)
பிரதான பாடநெறிகள்:
- 2.2.2.1 முகாமைத்துவம் (Management) - பாடநெறி குறியீடு: 016 (உத்தேச அனுமதி: 5424)
- 2.2.2.2 முகாமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை (Management and Public Policy) - பாடநெறி குறியீடு: 028 (உத்தேச அனுமதி: 100)
- 2.2.2.3 ஆதன முகாமைத்துவம் மற்றும் மதிப்பிடல் (Real Estate Management and Valuation) - பாடநெறி குறியீடு: 017 (உத்தேச அனுமதி: 70)
- 2.2.2.4 வணிகவியல் (Commerce) - பாடநெறி குறியீடு: 018 (உத்தேச அனுமதி: 884)
அனுமதிக்கான தகைமைகள்
மேற்குறிப்பிட்ட கற்கைநெறிகளின் அனுமதிக்குத் தகுதி பெற பரீட்சார்த்திகள் பின்வரும் பாட இணைப்புகளில் ஒன்றில் குறைந்தது மூன்று "S" சித்தியினை க.பொ.த.(உ/த) பரீட்சையில் பெற்றிருத்தல் வேண்டும்:
- வணிகக் கல்வி
- பொருளியல்
- கணக்கீடு
அல்லது
குறைந்தது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில் இரு பாடங்கள், அத்துடன் மூன்றாவது பாடம் பின்வருவனவற்றிலிருந்து:
- விவசாய விஞ்ஞானம்
- புவியியல்
- வணிகப் புள்ளிவிபரவியல்
- ஜேர்மன்
- இணைந்த கணிதம் அல்லது கணிதம்
- வரலாறு
- அரசியல் விஞ்ஞானம்
- ஆங்கிலம்
- அளவையியலும் விஞ்ஞான முறையும்
- பிரெஞ்சு
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
முக்கிய குறிப்பு: கணக்கியல், கணக்காய்வு மற்றும் தடயவியல் கணக்கீடு மற்றும் நிதி போன்ற சில பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு க.பொ.த. (உ/த) பரீட்சையில் கணக்கீடு (Accounting) பாடத்தினை எடுப்பது அவசியம்.
பல்கலைக்கழகங்களும் கற்கைநெறிகளும்
கற்கை நெறிக்கான காலம்: 4 வருடங்கள்
கொழும்புப் பல்கலைக்கழகம்
- வணிக நிர்வாக கௌரவமாணி
- நிதியியல் வணிக நிர்வாக கௌரவமாணி
- மனிதவள முகாமைத்துவம் வணிக நிர்வாக கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் வணிக நிர்வாக கௌரவமாணி
- கணக்கியல் வணிக நிர்வாக கௌரவமாணி
- வணிகப் பொருளியல் வணிக நிர்வாக கௌரவமாணி
- சர்வதேச வணிகம் வணிக நிர்வாக கௌரவமாணி
- விருந்தோம்பல் மற்றும் ஓய்வு முகாமைத்துவம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
- வியாபார நிருவாகம் விஞ்ஞான சிறப்புமாணி
- வணிக நிர்வாக கௌரவமாணி
- முகாமைத்துவம் மற்றும் பொதுக்கொள்கை - விஞ்ஞான சிறப்புமாணி
- வணிக சிறப்புமாணி
- ஆதன முகாமைத்துவம் மற்றும் மதிப்பிடல் - விஞ்ஞான சிறப்புமாணி
- கணக்கியல் - விஞ்ஞான சிறப்புமாணி
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் விஞ்ஞான சிறப்புமாணி
- மனிதவள முகாமைத்துவம் - விஞ்ஞான சிறப்புமாணி
- நிதியியல் - விஞ்ஞான சிறப்புமாணி
- வியாபார பொருளியல் (வியாபார நிருவாகம்) - விஞ்ஞான சிறப்புமாணி
- செயற்பாடு மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவம் - விஞ்ஞான சிறப்புமாணி
- வியாபாரத் தகவல் முறைமைகள் - விஞ்ஞான சிறப்புமாணி
- முயற்சியாண்மை விஞ்ஞான சிறப்புமாணி
களனிப் பல்கலைக்கழகம்
- மனித வளம் - வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- கணக்கியல் - வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- நிதியியல் - வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- வணிக கௌரவமாணி
- வியாபார தொழில்நுட்பம் வணிக கௌரவமாணி
- தொழில்முயற்சி வணிக கௌரவமாணி
- நிதி முகாமைத்துவம் வணிக கௌரவமாணி
- காப்புறுதி வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- வங்கியியல் - வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- கணக்காய்வு மற்றும் தடயவியல் கணக்கீடு வணிக முகாமைத்துவ கௌரவமாணி
- நிதி பொறியியல் வணிக முகாமைத்துவமாணி
- கணக்கியல் தகவல் முறைமைகள் வணிக முகாமைத்துவமாணி
- எண்ணியல் சந்தைப்படுத்தல் வணிக முகாமைத்துவ சிறப்புமாணி
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- கணக்கியலில் வணிக நிர்வாக கௌரவமாணி
- நிதியியல் முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- மனித வள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- சந்தைப்படுத்தலில் வணிக நிர்வாக கௌரவமாணி
- கணக்கியல் மற்றும் நிதியியலில் வணிக கெளரவமாணி
- வணிக தொழில்நுட்ப முகாமைத்துவத்தில் வணிக கௌரவமாணி
உறுகுணைப் பல்கலைக்கழகம்
- கணக்கியல் - வணிக நிர்வாக கௌரவமாணி
- வணிக கௌரவமாணி
- கௌரவ வணிக நிர்வாகமாணி - வணிக முகாமைத்துவம்
- முயற்சியாண்மை வணிக நிர்வாக கௌரவமாணி
- நிதி - வணிக நிர்வாக கௌரவமாணி
- மனிதவள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் வணிக நிர்வாக கௌரவமாணி
கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை
- வணிக நிர்வாக கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- மனிதவள முகாமைத்துவத்தில் வணிக நிர்வாக கௌரவமாணி
- வணிக கௌரவமாணி
- கணக்கீடு மற்றும் நிதியியலில் வணிக கௌரவமாணி
- தொழில் முயற்சி அபிவிருத்தியில் வணிக கௌரவமாணி
- வியாபார பொருளியலில் வணிக கௌரவமாணி
இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
- இளமாணி வர்த்தக நிர்வாக கௌரவம்
- வணிகமாணி கௌரவம்
இலங்கை இரஜரட்ட பல்கலைக்கழகம்
- கணக்கியல் மற்றும் நிதியியல் விஞ்ஞான கௌரவமாணி
- வணிக முகாமைத்துவம் - விஞ்ஞான கௌரவமாணி
- சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் - விஞ்ஞான கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் - விஞ்ஞான கௌரவமாணி
- மனிதவள முகாமைத்துவம் - விஞ்ஞான கௌரவமாணி
- தகவல் முறைமைகள் விஞ்ஞான கௌரவமாணி
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
- கணக்கியல் மற்றும் வணிக நிதியியல் - விஞ்ஞான சிறப்புமாணி
- வங்கியியல் மற்றும் நிதியியல் - விஞ்ஞான சிறப்புமாணி
- வணிக முகாமைத்துவம் - விஞ்ஞான சிறப்புமாணி
- இளமாணி காப்புறுதி மற்றும் நிதியியலில் விஞ்ஞான கௌரவம்
இலங்கை சப்ரகமுவப் பல்கலைக்கழகம்
- விஞ்ஞான இளமாணி வியாபார முகாமைத்துவம் கௌரவம்
- விஞ்ஞான இளமாணி நிதி முகாமைத்துவம் விஞ்ஞான கௌரவம்
- விஞ்ஞான இளமாணி சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் விஞ்ஞான கௌரவம்
- விஞ்ஞான இளமாணி உல்லாச பயண முகாமைத்துவம் விஞ்ஞான கௌரவம்
- விஞ்ஞான இளமாணி சூழலியல் வியாபார முகாமைத்துவம் விஞ்ஞான கௌரவம்
- விஞ்ஞான இளமாணி வங்கியும் காப்புறுதியும் விஞ்ஞான கெளரவம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
- மனிதவள முகாமைத்துவம் வணிக நிர்வாக கௌரவமாணி
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் வணிக நிர்வாக கௌரவமாணி
- செயற்பாடுகள் முகாமைத்துவம் வணிக நிர்வாக கௌரவமாணி
- கணக்கியல் மற்றும் நிதியியல் வணிக நிர்வாக கௌரவமாணி
- நிறுவன முகாமைத்துவம் - வணிக நிர்வாக கௌரவமாணி
2.2.2.5 முகாமைத்துவக் கற்கைகள் (TV) [Management Studies (TV)]
- பாடநெறி குறியீடு: 022
- உத்தேச அனுமதி: 458
- பல்கலைக்கழகங்கள்:
- வவுனியா பல்கலைக்கழகம், இலங்கை
- கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (திருகோணமலை வளாகம்)
- முக்கிய குறிப்பு: வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்களில் குறைந்தது 60% மானோரும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கு தெரிவு செய்யப்படுவோரில் குறைந்தது 40% மானோரும் வணிகவியல் பாடப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.
2.2.2.6 வியாபாரத் தகவல் முறைமைகள் (கெளரவம்) [Business Information Systems (Honours)]
- பாடநெறி குறியீடு: 077
- உத்தேச அனுமதி: 80
- பல்கலைக்கழகம்: ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
- காலம்: 04 வருடங்கள்
- அனுமதிக்கான தகைமைகள்:
- க.பொ.த.(உ/த) பரீட்சையில் வணிகக் கல்வி, பொருளியல், கணக்கீடு ஆகிய பாடங்களில் குறைந்தது இரண்டு (02) பாடங்களுடன்
- மூன்றாவது பாடமாக: தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், இணைந்த கணிதம், தர்க்கவியல் மற்றும் விஞ்ஞான முறைமைகள், வணிகப் புள்ளிவிபரவியல் அல்லது பௌதீகவியல்.
2.2.2.7 கணக்கியல் தகவல் முறைமைகள் (Accounting Information Systems)
- பாடநெறி குறியீடு: 127
- உத்தேச அனுமதி: 50
- பல்கலைக்கழகம்: களனிப் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழிமூலம்)
- அனுமதிக்கான தகைமைகள்:
- கணக்கீடு பாடத்தில் சித்தி பெற்றிருப்பதுடன்
- பொருளியல் அல்லது வணிகக் கல்வி
- மற்றும் வியாபார புள்ளிவிபரவியல் அல்லது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்.
2.2.2.8 வங்கியியல் மற்றும் காப்புறுதி (Banking and Insurance)
- பாடநெறி குறியீடு: 133
- உத்தேச அனுமதி: 50
- பல்கலைக்கழகம்: வவுனியா பல்கலைக்கழகம், இலங்கை (ஆங்கில மொழிமூலம்)
- அனுமதிக்கான தகைமைகள்: கணக்கீடு மற்றும் பொருளியல் பாடத்தில் சித்தி பெற்றிருப்பதுடன் வணிகப் பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஆகக் குறைந்ததது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
2.2.2.9 சேவை முகாமைத்துவம் (Service Management)
- பாடநெறி குறியீடு: 140
- உத்தேச அனுமதி: 50
- பல்கலைக்கழகம்: இலங்கை கம்பஹா விக்ரமாராச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் (ஆங்கில மொழிமூலம்)
- அனுமதிக்கான தகைமைகள்: க.பொ.த. (உ/த) பரீட்சையில் வணிகப் பாடப்பிரிவு பாடங்களில் ஆகக் குறைந்ததது 'S' தரத்தை பெற்றிருத்தல் வேண்டும்.
வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கான ஏனைய பொதுவான துறைகள்
வணிகவியற் பிரிவில் உள்ள பாடங்களுக்கு தோற்றிய மாணவர்கள் பின்வரும் கற்கைநெறிகளுக்கும் அனுமதி கோரலாம் (தகைமைகளுக்கு உட்பட்டு):
- சட்டம்
- கலை (SAB)
- கணிய அளவையியல்
- தகவல் தொழில்நுட்பம் (IT)
- கட்டடக்கலை
- வடிவமைப்பு
- நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும்
- நகர தகவலியல் மற்றும் திட்டமிடல்
- சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும்
- தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் (ICT)
- வசதிகள் முகாமைத்துவம்
- தொழில்முயற்சியும் முகாமைத்துவமும்
- கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம்
- முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)
- உடற்றொழில் கல்வி
- விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும்
- விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்
- தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும்
- சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும்
- தகவல் முறைமைகள்
- நிலத்தோற்றக் கட்டடக்கலை
- திரைப்படமும் தொலைகாட்சி கற்கைகள்
- செயற்திட்ட முகாமைத்துவம்
- உணவு வணிக முகாமைத்துவம்
- வியாபார விஞ்ஞானம்
- நிதி பொறியியல்
- நிதியியல் கணிதக்கற்கை மற்றும் தொழில்முறை புள்ளியியல்
- மனித வள மேம்பாடு
- மருத்துவ சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம்
- யோகா மற்றும் மனநிகழ்வுகளின் ஆய்வு
- சுதேச அறிவியல் மீதான சமூகக் கல்வி
- நிதி பொருளியல்
- ஆங்கில மொழி மற்றும் பிரயோக மொழியியல்
- ஆக்கத்திறன் இசை தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன்
- ஆரம்பக் கல்வி
0 Comments