>

ad

Duties of the Teacher Advisory Service (ISA)

ගුරු උපදේශක සේවයේ පොදු කාර්ය භාරය 

ஆசிரியர் ஆலோசகர் சேவையினரின் கடமை பொறுப்புகள் தொடர்பான சுற்றறிக்கை

ආයතන හා පරිපාලන කටයුතුවලට අදාළ රාජකාරී

1. සාමාන්‍ය කාර්යාලිය රාජකාරී වේලාව පෙ.ව.8.30 සිට ප.ව.4.15 දක්වා වන අතර පාසල්වල රාජකාරි කටයුතු කරන දිනවල දී පෙ.ව.7.30 සිට ප.ව.1.30 දක්වා සම්පූර්ණ කාලය තුළ අදාළ රාජකාරී කටයුතුවල නිරතව සිටීම.

(අනිකුත් රාජකාරී සඳහා සහභාගී වීමේ දී කොට්ඨාස කලාප අධ්‍යාපන කාර්යාලය විසින් නියමි කරන ලද වේලාව රාජකාරී වේලාව වශයෙන් සැළකේ. කාර්යයේ ස්වභාවය හා අවශයතාව අනුව රාජකාරි වේලාව තීරණය වනු ඇත.)

1. பொது அலுவலக கடமை நேரம் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை ஆகும். பாடசாலைகளில் கடமை புரியும் நாட்களில் மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை முழு நேரமும் தொடர்புடைய கடமைகளில் ஈடுபட வேண்டும்.

(ஏனைய கடமைகளுக்காக கலந்துகொள்ளும் போது, பிரதேச கல்வி அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் கடமை நேரமாகக் கருதப்படும். வேலையின் தன்மை மற்றும் தேவைக்கேற்ப கடமை நேரம் தீர்மானிக்கப்படும்.)

2. මහජන දිනය සඳුදාවන බැවින් සියලුම නිලධාරීන් එදින කාර්යාලයේ රැදිය යුතු වේ. එමෙන් ම එදින සියලුම නිලධාරීන් කාර්යාලයේ රැදෙන බැවින් කලාප කාර්යාල මගින් සිදු කරන විෂය සංවර්ධන කටයුතු, බාහිර ඇගයීම්වලට අදාළ කටයුතු සහ වෙනත් රාජකාරි කටයුතු සැළසුම් කිරීම.

2. திங்கட்கிழமை பொதுமக்களுக்கான நாள் என்பதால், அனைத்து அதிகாரிகளும் அன்றைய தினம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். மேலும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அலுவலகத்தில் இருப்பதால், வலய அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் பாட அபிவிருத்திப் பணிகள், வெளி மதிப்பீடுகள் தொடர்பான பணிகள் மற்றும் ஏனைய கடமைகளை திட்டமிடலாம்.

3. අවම වශයෙන් මසකට දින 10ක් (සඳුදා දින හැර සතියේ අනිකුත් දිනයන්හි දී) ගුරු උපදේශකවරයකුගේ ප්‍රධාන කාර්යය වන පාසල්වල විෂයයට අදාළ ඇගයීම්, ආදර්ශ ඉගැන්වීම්, පාසල් බාහිර ඇගයීම්, ගුරු සුසාධ්‍යකරණ හා විෂය සංවර්ධන වැඩ සටහන් සඳහා සම්බන්ධ වී කටයුතු කිරීම.

3. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் (திங்கட்கிழமைகள் தவிர வாரத்தின் மற்ற நாட்களில்) ஆசிரியர் ஆலோசகரின் முக்கியப் பணிகான பாடசாலைகளில் பாடத்துடன் தொடர்புடைய மதிப்பீடுகள், மாதிரி கற்பித்தல், பாடசாலை வெளி மதிப்பீடுகள், ஆசிரியர்களுக்கு வசதி வழங்குதல் மற்றும் பாட அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு செயல்படுதல் ஆகும்.

4. පාසල් නිවාඩු කාලවල වැඩ කරන දිනයන්හි දී නිත්‍ය සේවා ස්ථානයට වාර්තා කළ යුතු අතර විෂය සංවර්ධන කටයුතු වලට අදාළ රාජකාරී සිදු කිරීම.

4. பாடசாலை விடுமுறை நாட்களில் வேலை செய்யும் நாட்களில் வழக்கமான சேவை நிலையத்திற்கு அறிக்கை செய்ய வேண்டும் அத்துடன் பாட அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. විෂය සංවර්ධන කටයුතු සහ ගුරු සුසාධ්‍යකරණ  කටයුතු සඳහා පාසලට පැමිණීම හා කරන ලද කාර්යය තහවුරු කිරීම සඳහා "අධ්‍යාපන සංවර්ධන සටහන්" පොතෙහි සටහන් තැබීම.

5. பாட மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு வசதி வழங்குதல் பணிகளுக்காக பாடசாலைக்கு வருகை தந்தமை மற்றும் மேற்கொள்ளப்பட்ட பணிகளை உறுதிப்படுத்த "கல்வி அபிவிருத்திக்கான பதிவேட்டில்" பதிவு செய்ய வேண்டும்.

6. කලාප/ කොට්ඨාස කාර්යාල වාර්ෂික සැලැස්මට අනුව ඉදිරි මාසික වැඩසටහන පැමි මසකම 25 දින වන විට අනුමැතිය සඳහා ඉදිරිපත් කිරීම.

6. வலய/ கோட்ட அலுவலகங்களின் வருடாந்த திட்டத்தின்படி, அடுத்த மாதத்தின் 25ஆம் திகதிக்குள்  அடுத்த மாதத்திற்கான திட்டத்தை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க வேண்டும்.

7. කලාප අධ්‍යාපන කාර්යාලයට පත්වීම් ලබන නිලධාරීන් තම මාසික වැඩසටහනට අනුව ඉටු කළ වැඩ විස්තරය අදාළ ආකෘතියෙන් ඊලඟ මාසයේ පස්වන දිනට පෙර කලාප අධ්‍යාපන කාර්යාලයේ විෂය භාර නියෝජ්‍ය සහකාර අධ්‍යාපන අධ්‍යක්ෂ මගින් හෝ කොට්ඨාස අධ්‍යාපන අධ්‍යක්ෂ විසින් කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ වෙත ඉදිරිපත් කිරීම.

7. வலயக் கல்வி அலுவலகத்தில் நியமனம் பெறும் அதிகாரிகள், தங்கள் மாதாந்த திட்டத்தின்படி செய்யப்பட்ட வேலை விவரத்தை, அடுத்த மாதத்தின் ஐந்தாம் திகதிக்கு முன், தொடர்புடைய படிவத்தில், வலயக் கல்வி அலுவலகத்தின் பாடத்துக்குப் பொறுப்பான பிரதி பணிப்பாளர்மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் மூலமாகவோ அல்லது கோட்டக் கல்விப் பணிப்பாளரால் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

8. දෛනිකව ඉටු කරන රාජකාරි පිළිබඳ තොරතුරු රාජකාරී දින පොතෙහි විධිමත් ලෙස සටහන් කිරීම හා අවශ්‍ය අවස්ථාවන්හි දී එය නියාමනය සඳහා ඉදිරිපත් කිරීම.

8. தினசரி மேற்கொள்ளப்படும் கடமைகள் பற்றிய தகவல்களை கடமை தினக் குறிப்புப் புத்தகத்தில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் அத்துடன் தேவைப்படும் போது பரிசீலணைக்காக சமர்ப்பிக்க வேண்டும்.

9. පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව / කලාප අධ්‍යාපන කාර්යාලය කොට්ඨාස අධ්‍යාපන කාර්යාලය මෙහෙයවන රැස්වීම් හා විවිධ වැඩසටහන් සඳහා කැඳවීම් අනුව සහභාගී වීම.

9. மாகாண கல்வித் திணைக்களம் / வலயக் கல்வி அலுவலகம் / பிரிவுக் கல்வி அலுவலகம் நடத்தும் கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பின் பேரில் கலந்துகொள்ள வேண்டும்.

10. තමන් විසින් සිදු කරනු ලබන විශේෂ කාර්යයක් (ව්‍යාපෘති සහ විෂය සංවර්ධන ක්‍රියාකාරකම්) පිළිබඳව වාර්තාවක් මාසිකව කොට්ඨාස අධ්‍යාපන අධ්‍යක්ෂ / විෂය භාර නියෝජ්‍ය සහකාර අධ්‍යාපන අධ්‍යක්ෂ මගින් කලාප අධ්‍යාපන කාර්යාලය වෙත ලබා දීම.

10. தாம் மேற்கொள்ளும் ஒரு சிறப்புப் பணி (திட்டங்கள், பாட மேம்பாட்டு நடவடிக்கைகள்) பற்றிய அறிக்கையை மாதாந்தம் பிரிவுக் கல்விப் பணிப்பாளர் / பாடத்துக்குப் பொறுப்பான பிரதி மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் மூலமாக வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

11. ගුරු උපදේශකවරුන්ගේ සියලු කාර්යයන් අධීක්ෂණය කරන ආයතන ප්‍රධානියා කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ විය යුතු අතර විෂය භාර අධ්‍යාපන අධ්‍යක්ෂ ආසන්නතම ප්‍රධානියා වේ.

11. ஆசிரியர் ஆலோசகர்களின் அனைத்துப் பணிகளையும் கண்காணிக்கும் நிறுவனத்தின் தலைவர் வலயக் கல்விப் பணிப்பாளராக இருக்க வேண்டும் என்பதுடன் பாடத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் உடனடித் தலைவராக இருப்பார்.

12. ආයතන සංග්‍රහය, මුදල් රෙගුලාසි හා කලින් කලට නිකුත් කරනු ලබන චක්‍රලේඛ, ආඥානත්, උපදෙස් සංග්‍රහ වලට අනුගතව රාජකාරී ඉටු කිරීම.

12. தாபன விதிக் கோவை, நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கட்டளைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் பணிப்புரைகளுக்கு இணங்க கடமைகளை நிறைவேற்றுதல்.

13. පිළිගත් වෘත්තීය ආචාර ධර්ම වලට අනුකූලව කටයුතු කිරීම.

13. அங்கீகரிக்கப்பட்ட தொழில் ரீதியான நெறிமுறைகளின்படி செயல்படுதல்.

14. තම විෂයට අදාළ විෂය සංවර්ධන ක්‍රියාකාරී සැලැස්මක් සකස් කර කලාපයේ විෂය අධ්‍යක්ෂවරයාගේ නිර්දේශ හා කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයාගේ අනුමැතිය ලබා ගෙන ක්‍රියාත්මක කිරීම සහ ප්‍රගතිය පිළිබඳ තොරතුරු පවත්වා ගැනීම.

14. தனது பாடத்துடன் தொடர்புடைய பாட அபிவிருத்திச் செயல் திட்டத்தை தயாரித்து, வலயத்தின் பாடப் பணிப்பாளரின் பரிந்துரைகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அங்கீகாரத்தைப் பெற்று செயல்படுத்துதல் அத்துடன் முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பேணுதல்.

15. කොට්ඨාස කලාප වාර්ෂික විෂය සංවර්ධන සැලැස්ම හා උපාය මාර්ගික සැලසුම් සකස් කිරීමේ දී තම විෂය සංවර්ධනයට අදාළ තොරතුරු ලබා දීම හා වාර්ෂික විෂය සංවර්ධන සැලැස්ම ලබා දීමට සක්‍රියව දායක වීම

15. கோட்ட மற்றும் வலயங்களின் வருடாந்த பாட அபிவிருத்தித் திட்டம் மற்றும் மூலோபாய திட்டங்களை தயாரிக்கும் போது, தனது பாட அபிவிருத்தியுடன் தொடர்புடைய தகவல்களை வழங்குதல் மற்றும் வருடாந்த பாட அபிவிருத்தித் திட்டங்களுக்கு  நேரடியாப் பங்களிப்புச்  செய்தல்.

16. විෂය සංවර්ධනයට අදාළ තොරතුරු යාවත්කාලීනව පවත්වා ගැනීම, විශ්ලේෂණය හා අවශ්‍ය අවස්ථාවල දී අදාළ පාර්ශව වෙත ඉදිරිපත් කිරීම.

16. பாட அபிவிருத்தியுடன் தொடர்புடைய தகவல்களை புதுப்பித்தல், பகுப்பாய்வு செய்தல் அத்துடன் தேவைப்படும் போது தொடர்புடைய தரப்பினருக்கு சமர்ப்பித்தல்.

17. විෂයට අදාළ ප්‍රතිපල විශ්ලේෂණ මත ශිෂ්‍ය සාධන මට්ටම ඉහළ නැංවීම සහ අඩු සාධන මට්ටම් සහිත පාසල් වල ප්‍රතිඵල සංවර්ධනය සඳහා ක්‍රියාත්මක කළ යුතු වැඩසටහන්, සේවාස්ථ ගුරු පුහුණු, සංවර්ධන සැසි හා සම්මන්ත්‍රණ කලාප කොට්ඨාස මට්ටමින් සංවිධානය කිරීමට හා ක්‍රියාත්මක කිරීමට සහාය වීම.

17. பாடத்துடன் தொடர்புடைய பெறுபேறுகளின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துதல் அத்துடன் குறைந்த அடைவு மட்டங்கள் கொண்ட பாடசாலைகளில் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள்,  ஆசிரியர்களுக்கான சேவைக்கால பயிற்சிகள், அபிவிருத்தியை  நோக்காக் கொண்ட அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை வலய மற்றும் கோட்டக் கல்வி மட்டத்தில் ஒழுங்கமைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் உதவுதல்.

18. විෂයයට අදාළව ක්‍රියාත්මක කළ හැකි ප්‍රායෝගික පරීක්ෂණ, විෂයානුබද්ධ වැඩසටහන් / තරඟ හා විවිධ විෂය සංවර්ධන ක්‍රියාකාරකම් සංවිධානය සඳහා නියෝජ්‍ය සහකාර අධ්‍යාපන අධ්‍යක්ෂවරයා සමඟ සමීප සහයෝගයෙන් කටයුතු කිරීම.

18. பாடத்துடன் தொடர்புடைய செயல்முறைப் பரீட்சைகள், பாடத்துடன் தொடர்புடைய செயற்திட்டங்கள்/போட்டிகள் மற்றும் பல்வேறு பாட அபிவிருத்திச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதற்காக பிரதி உதவி கல்விப் பணிப்பாளருடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படுதல்.

19. අවශ්‍යතාව මත විවිධ අධ්‍යාපන ආයතන හා වෙනත් ආයතන සමඟ සම්බන්ධීකරණය පවත්වා ගනිමින් විෂය සංවර්ධනය සඳහා දායක වීම.

19. தேவைக்கேற்ப பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பாட அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்தல்.

20. තම විෂයට අදාළව පාසල්වල පවතින විෂය මාලා ද්‍රව්‍ය අවශයතා, හිඟතා හා අතිරික්තතා හඳුනා ගැනීම හා අවශ්‍ය ක්‍රියා මාර්ග ගැනීම සඳහා වාර්තා කිරීම.

20. தனது பாடத்துடன் தொடர்புடைய பாடசாலைகளில் உள்ள பாடத்திட்டப் பொருட்களின் தேவைகள், பற்றாக்குறைகள் மற்றும் மிகுதியை அடையாளம் காணுதல் அத்துடன் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அறிக்கை செய்தல்.

21. තම විෂයට අදාළ පෙළපොත් සහ ගුරු මාර්ගෝපදේශ සංග්‍රහ අවශ්‍යතා පිළිබඳ සොයා බලා අදාළ පාර්ශව දැනුවත් කිරීම.

21. தனது பாடத்துடன் தொடர்புடைய பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிக் கையேடுகளின் தேவைகள் குறித்து கண்டறிந்து தொடர்புடைய தரப்பினருக்கு தெரிவித்தல்.

22. තම විෂයයට අදාළව අධ්‍යාපන පර්යේෂණ කාර්යයන්හි නිරත වීම.

22. தனது பாடத்துடன் தொடர்புடைய கல்வி ஆய்வுகளில் ஈடுபடுதல்.

23. ඉගෙනුම් - ඉගැන්වීම් ක්‍රියාකාරකම් සම්බන්ධව සංවර්ධනාත්මක ලෙස ගුරුවරුන් සඳහා අවශ්‍ය උපදෙස් ලබාදීම.

23. கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அபிவிருத்தி ரீதியாக ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்.

24. ගුරු ඇගයීම් හා සහාය ඉගැන්වීම් අවස්ථාවලදී විවිධ ක්‍රමවේද මඟින් සිසුන්ගේ ඉගෙනුම් ගැටලු හඳුනා ගැනීමට හා ශිෂ්‍ය සාධන මට්ටම් සංවර්ධනයට අවශ්‍ය මාර්ගෝපදේශ ලබා දීම.

24. ஆசிரியர் மதிப்பீடுகள் மற்றும் துணை கற்பித்தல் சந்தர்ப்பங்களில் பல்வேறு முறைகள் மூலம் மாணவர்களின் கற்றல் சிக்கல்களை அடையாளம் காணுதல் அத்துடன் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்காக தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

25. අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ, විෂයමාලා නවීකරණ පිළිබඳව ගුරුවරු දිශාභිමුඛ කිරීම හා අවශ්‍යතා අනුව දරුවා, පුහුණු කිරීම සඳහා සම්පත් පුද්ගලයෙකු ලෙස කටයුතු කිරීම.

25. கல்வி சீர்திருத்தங்கள், பாடத்திட்ட நவீனமயமாக்கல் குறித்து ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் அத்துடன் தேவைக்கேற்ப அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வளவாளராக செயல்படுதல்.

26. අධ්‍යාපන හා විෂය සංවර්ධන කටයුතු සඳහා සංවිධානය කරනු ලබන වැඩමුළු, සම්මන්ත්‍රණ, සැසි හා පුහුණු වැඩසටහන් වලට සහභාගී වීම, අත්දැකීම් හුවමාරු කර ගැනීම හා අවශ්‍යතාව අනුව සම්පත්දායකත්වය සැපයීම.

26. கல்வி மற்றும் பாட மேம்பாட்டுப் பணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகள், மாநாடுகள், அமர்வுகள் மற்றும் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்றல், அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் அத்துடன் தேவைக்கேற்ப வளவாளராக செயல்படுதல்.

27. ගුරුවරුන්ගේ ඉගෙනුම් - ඉගැන්වීම් ක්‍රියාවලිය සංවර්ධනය සඳහා කේවල ඇගයීම් හා ආදර්ශ ඉගැන්වීම් සිදු කිරීම හා විෂය සංවර්ධනය සඳහා ගත යුතු ක්‍රියාමාර්ග පිලිබඳ ගුරුවරුන්ට දැනුවත් කිරීම.

27. ஆசிரியர்களின் கற்றல்-கற்பித்தல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக தனிப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் முன்மாதிரி கற்பித்தலில் ஈடுபடல்  அத்துடன் பாட மேம்பாட்டிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

28. තම විෂයට අදාළ ගුරු ගැටලු සහිත පාසල්වල එම විෂයෙහි ඉගෙනුම් - ඉගැන්වීම් කටයුතු පවත්වා ගෙන යාමට වැඩි අවධානයක් යොමු කරමින් සිසුන්ට සිදුවන පාඩුව අවම කිරීමට කටයුතු කිරීම.

28. தனது பாடத்துடன் தொடர்புடைய ஆசிரியர் பிரச்சனைகள் உள்ள பாடசாலைகளில், அப்பாடத்தில் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளை தொடர்வதில் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுத்தல்.

29. අධ්‍යාපනය සහ තම විෂයට අදාළව නව දැනුම හා ඉගැන්වීම් ක්‍රමවේද පිළිබඳව යාවත්කාලීන වීම සහ ගුරුභවතුන් සමඟ හුවමාරු කර ගැනීම.

29. கல்வி மற்றும் தனது பாடத்துடன் தொடர்புடைய புதிய அறிவு மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்து புதுப்பித்தல் அத்துடன் ஆசிரியர்களுடன் பரிமாறிக் கொள்ளுதல்.

30. කොට්ඨාස කලාප මට්ටමෙන් ගුරු සංසද පවත්වා ගැනීම හා විෂය සංවර්ධනය සඳහා ගුණාත්මක සංවර්ධන යෝජනා ඉදිරිපත් කිරීම.

30. பிரிவு மற்றும் வலய மட்டத்தில் ஆசிரியர் ஒன்றியங்களை ஏற்படுத்திப் பராமரித்தல் அத்துடன் பாட அபிவிருத்திக்கான தரமான அபிவிருத்தி முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்.

31. තම විෂයට අදාළව ගුරුභවතුන්ගේ ඉගැන්වීම් සැලසුම් (වාර සැලසුම් / පාඩම් සැලසුම්...) සකස් කිරීම සඳහා සහාය වීම හා එම සැලසුම් ක්‍රියාවට නැංවීම පිළිබඳ නියාමනය පවත්වා ගැනීම.

31. தனது பாடத்துடன் தொடர்புடைய ஆசிரியர்களின் கற்பித்தல் திட்டங்களை (பாட விதானங்கள் / பாடத் திட்டங்கள்) தயாரிப்பதற்கு ஆதரவளித்தல் அத்துடன் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கண்காணிப்பை பராமரித்தல்.

32. තම විෂයට අදාළ පාසල් පාදක තක්සේරුකරණ හා ඇගයීම් ක්‍රියාත්මක කිරීම සඳහා ගුරුවරුන් මෙහෙය වීම, අවශ්‍ය සහාය ලබා දීම සහ නියාමනය සිදු කිරීම.

32. தனது பாடத்துடன் தொடர்புடைய பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடு மற்றும் மதிப்பீடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல், தேவையான ஆதரவை வழங்குதல் அத்துடன் ஒழுங்குமுறைப்படுத்துதல்.

33. වාර්ෂික පරීක්ෂණ, වාර පරීක්ෂණ, ප්‍රතිපෝෂණ වැඩසටහන්, ශිෂ්‍ය සාධන වැඩ සටහන් සඳහා තම විෂයට අදාළ ප්‍රශ්න පත්‍ර හා කාර්ය පත්‍රිකා සකස් කිරීමට සක්‍රීය දායකත්වය ලබා දීම.

33. வருடாந்த பரீட்சைகள், தவணைப் ரீட்சைகள், பின்னூட்டல் திட்டங்கள், மாணவர் அடைவுத் திட்டங்களுக்காக தனது பாடத்துடன் தொடர்புடைய வினாத்தாள்கள் மற்றும் பணித்தாள்களை தயாரிப்பதற்கு நேரடியான பங்களிப்பை வழங்குதல்.

34. ජාතික / පළාත් / කලාප/කොට්ඨාස මගින් ක්‍රියාත්මක කරන පාසල් බාහිර ඇගයීම් සඳහා සක්‍රීයව සහභාගී වීම හා ඇගයීම් අනාවරණ හා සංවර්ධන යෝජනා නොපමාව වාර්තා කිරීම.

34. தேசிய / மாகாண / வலய / கோட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை வெளி மதிப்பீடுகளில் நேரடியாகப் பங்கேற்றல் அத்துடன் மதிப்பீட்டில் இனங்காணப்படும் விடயங்கள் மற்றும் அபிவிருத்திக்காக வழங்கப்படும் முன்மொழிவுகளை உடனடியாகப் அறிக்கையிடல்

35. පාසල් අභ්‍යන්තර ඇගයීම් ක්‍රියාත්මක වීම නියාමනය හා පාසල් බාහිර ඇගයීම් අනාවරණ මත පසු විපරම් කටයුතු සිදු කිරීම සඳහා සහාය වීම.

35. பாடசாலை உள் மதிப்பீடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஒழுங்குபடுத்துதல் அத்துடன் பாடசாலை வெளி மதிப்பீட்டு கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளித்தல்.

36. ජාතික විභාග හා ඇගයීම් ක්‍රියාවලියට අදාළව පැවරෙන විභාග කාර්ය මණ්ඩල හා ඇගයීම් කාර්ය මණ්ඩල රාජකාරි සිදු කිරීම.

36. தேசிய பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டுச் செயல்முறையுடன் தொடர்புடையதாக ஒதுக்கப்படும் பரீட்சைப் பணியாளர்கள் மற்றும் மதிப்பீட்டுப் பணியாளர்களின் கடமைகளை மேற்கொள்ளுதல்.

37. පාසල්වල ක්‍රියාත්මක වන විවිධ සංවර්ධන වැඩ සටහන්වලට අදාළව පැවරී ඇති වගකීම් ඉටු කිරීම (පාසල් නගා සිටුවීමේ වැඩසටහන, කලාප නියාමන කමිටු......)

37. பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையதாக ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுதல் (பாடசாலை மேம்பாட்டுத் திட்டம், வலய ஒழுங்கமைப்புக் குக்கள்......)

38. කොට්ඨාස, කලාප හා පළාත් මට්ටමින් ක්‍රියාත්මක කරන විවිධ වැඩසටහන්වල දී (විෂය සමගාමී, සෞඛ්‍ය හා පෝෂණ, ගුරු ඇගයීම් වැඩසටහන් ......) අවශ්‍යතාව අනුව සහාය වීම හා නියාමනය සිදු කිරීම.

38.  கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் போது (பாட த்துடன் தொடர்பான, சுகாதாரம் மற்றும் போஷாக்கு, ஆசிரியர் மதிப்பீட்டுத் திட்டங்கள் ......) தேவைக்கேற்ப ஆதரவளித்தல் அத்துடன் ஒழுங்குபடுத்துதல்.

39. අධ්‍යාපන පද්ධතියට විටින් විට හඳුන්වා දෙනු ලබන වැඩ සටහන්වල ක්‍රියාකාරීත්වය සදහා සහාය වීම සහ පාසල් සමඟ සම්බන්ධීකරණය හා නියාමනය සිදු කිරීම.

39. கல்வி முறைக்கு அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல் அத்துடன் பாடசாலைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதல்.

40. කලාපය / කොට්ඨාසය තුළ ගුරු ඌනතා/ අතිරික්තතා සහ විෂය ගුරුවරුන් සම්බන්ධ වෙනත් ගැටලු හඳුනා ගනිමින් වාර්තා කිරීම.

40. வலயத்தில் / கோட்டங்களில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைகள் / மிகுதிகள் மற்றும் பாட ஆசிரியர்கள் தொடர்பான பிற சிக்கல்களை அடையாளம் கண்டு அறிக்கை செய்தல்.

41. පාසල් විශිෂ්ට ව්‍යවහාර හඳුනා ගැනීම හා ඒවා පාසල් අතර ප්‍රචලිත කිරීම සඳහා කටයුතු කිරීම.

41. பாடசாலை சிறந்த நடைமுறைகளை அடையாளம் காணுதல் அத்துடன் அவற்றை பாடசாலைகளிடையே பிரபலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

42. අධ්‍යාපන අමාත්‍යාංශය, ජාතික අධ්‍යාපන ආයතනය, විභාග දෙපාර්තමේන්තුව සහ ආසන්න අධික්ෂණ නිලධාරියා විසින් අවශ්‍යතාවය මත අධ්‍යාපන සංවර්ධනයට අදාළව රාජකාරී පවරන අවස්ථාවක එය ඉටු කිරීම.

42. கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் உடனடி மேற்பார்வை அதிகாரி ஆகியோரால் தேவைக்கேற்ப கல்வி மேம்பாட்டுடன் தொடர்புடைய கடமைகள் ஒதுக்கப்படும் போது அதனை நிறைவேற்றுதல்.

43. ආසන්නතම අධික්ෂණ නිළධාරියාගේ සම්බන්ධීකරණය මත කොට්ඨාස අධ්‍යාපන අධ්‍යක්ෂ / කලාප අධ්‍යාපන අධ්‍යක්ෂ / පළාත් අධ්‍යාපන අධ්‍යක්ෂ පවරන වෙනත් රාජකාරී ඉටු කිරීම.

43. நேரடி மேற்பார்வை அதிகாரியின் ஒருங்கிணைப்பின் பேரில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் / வலயக் கல்விப் பணிப்பாளர் / மாகாண கல்விப் பணிப்பாளர் ஒதுக்கப்படும் பிற கடமைகளை நிறைவேற்றுதல்.




ORIGINAL DOCUMENT

Download File

Post a Comment

0 Comments