முல்லைத்தீவு பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்த 08 மாணவிகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்தின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி மோர்னிங் பத்திரகை செய்தி வெளியிட்டுள்ளது.
13 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு மாணவிகள் சுயநினைவின்றி இருந்த நிலையில் அவர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் தங்களது தொலைபேசியில் வைத்திருந்தமைக்காக பாடசாலையின் ஆசிரியர் ஒருவருக்கும் உயர்தரப் பிரிவில் பயில்கின்ற 06 ஆண் மாணவர்களுக்கும் எதிராக ஜூன் 19ஆம் திகதியன்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் உறுதிசெய்வதற்காக வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் முறைப்பாட்டாளர்கள் பொலிசாரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஒரு நிர்வாகியாக இருந்தார் என்பதுடன் அவர் தனது வீடுகளில் கணிதப் பாடத்துக்கான பிரத்தியேக வகுப்புக்களையும் நடாத்தி வந்திருக்கின்றார் என்பதாகவும், இதன் மூலமாகவே மாணவர்களைத் தொடர்புகொள்கின்ற சந்தர்ப்பங்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றது என்பதாகவும் குறிப்பிட்ப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் குறித்த பெண் பிள்ளைகளுக்கு மயக்கமடையச் செய்வதற்கான போதைப்பொருள் கலந்த உணவு வழங்கியதாகவும், அதன் பின்னர் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது, மாணவர்களை அச்சுறுத்தி தொடர்ந்தும் பாலியல் ரீதியிலான சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்துவதற்கென குறித்த பாலியல் செயற்பாடுகளை ஒளிப்பதிவு செய்து வைத்திருந்திருக்கின்றார்.
குறித்த பிள்ளைகளின் பெற்றோர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே இருக்கும் வேளைகளிலேயே இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளதுடன், வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆசிரியருக்கும் ஆண் மாணவர்களிடையேயும் பகிரப்பட்டது.
17 வயது சிறுமி 2020 டிசம்பரில் ஒருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு முறைகள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்று, 13 வயது சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு ஜூலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துகொண்ட 6 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (
0 Comments