ad

சம்பவத் திரட்டுப் புத்தகம் மற்றுமம் அதில் உள்ளடங்கும் விடயங்கள். - Log Book

  • சம்பவத் திரட்டுப் புத்தகத்தை பாடசாலையின் வரலாறு மற்றும் கடமைகள் மேற்கொள்ளப்படுகின்றமை, பாடசாலையில் இடம்பெற்ற விசேட செயற்பாடுகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய பதிவாக பாடசாலையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும்,
  • சம்பவத் திரட்டுப் புத்தகத்தை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுதல்வேண்டும்.
  • சம்பவத் திரட்டுப் புத்தகத்தை அதிபருடைய பொறுப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • தகவல்களைக் குறிப்பிடுதல் அதிபரால் மேற்கொள்ளப்படுவதோடு அதிபர் பாடசாலையில் இல்லாத போது அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவரால் மேற்கொள்ளப்படவேண்டும்.
  • அதிபர் பாடசாலையை விட்டு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் சம்பவத்திரட்டுக்குறிப்பை இடுவதனூடாக பணிப்பகிர்வு செய்யப்பட வேண்டியதோடு கடமைகளைப்பொறுப்பேற்ற நபரினால் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக குறிப்பினை இடுதல் வேண்டும்.
  • சம்பவத் திரட்டுக் குறிப்பினை எழுதும்போது ஆரம்பத்திலேயே குறிப்பு இடப்படும் திகதியை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டியதோடு இறுதியில் குறிப்பினை இட்டநபரின் ஒப்பம், பெயர் மற்றும் பதவியை குறிப்பிட வேண்டும்.
  • ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பை இட்ட பின்னர் அடுத்த குறிப்பினை இடுவதற்காக விடப்படும் இடைவெளியானது மேலதிக குறிப்பினை இடுவதற்கு முடியாத வகையில் இருத்தல் வேண்டும்.
  • சம்பவத் திரட்டுக் குறிப்பொன்றை மாற்றம் செய்வதோ அல்லது வெட்டிவிடுதல் அல்லது அழிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பு ஒன்றை இடும்போது தவறு ஒன்று ஏற்படுமாயின் அடுத்தாக குறிப்பொன்றை இட்டு அதனை சரி செய்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு பக்கமும் இலக்கமிடப்பட்டிருப்பதோடு ஒரு பக்கத்தை அகற்றி விடுவதோ புதிய பக்கமொன்றை புகுத்துவதோ செய்யக் கூடாது.
  • ஒவ்வொரு சம்பவத் திரட்டுக் குறிப்பும் தொடரொழுங்கில் இலக்கமிடப்பட்டித்தல் பொருத்தமாகும்.
  • பயன்படுத்தப்பட்ட அனைத்து சம்பவத் திரட்டுப் புத்தகங்களையும் தொடரொழுங்கில் பேணவேண்டும்.


சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடுவதற்கு அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர்கள்.

  • நிரல் கல்வி அமைச்சு,மாகாண ,வலய மற்றும் கோட்டக் கல்விப் பணிமனைகளில் கடமைகளின் நிமித்தம் சமுகந் தரும் பதவிநிலை உத்தியோகத்தர்கள்.
  • பாடசாலைக்கு கடமையினிமித்தம் சமுகமளிக்கும் சுகாதார வைத்திய அதிகாரி, கணக்காய்வு மற்றும் ஒழுக்காற்று விசாரணை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் மற்றும் அரச சமாதான நிலை உத்தியோகத்தர்கள்.

சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் குறிப்பினை இடும் சந்தர்ப்பங்கள்.

  • பாடசாலையின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்குரிய விசேட சந்தர்ப்பங்கள்.
  • கடமையினிமித்தம் அதிபர் வெளியில் செல்லுதலும் கடமை நிறைவேற்றுதலும். 
  • கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படுதல்/இடமாற்றம்/பதவி உயர்வு/ ஓய்வு பெறுதல்.
  • இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் விடுவித்தல்/ பொருட்களை மீள ஒப்படைத்தல் தொடர்பான குறிப்பு
  • பாடசாலையில் விசேட பிரச்சினைகள் உருவாகும் பட்சத்தில்(திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ள போது, ஒழுக்காற்று பிரச்சினையொன்று உருவாகும் பட்சத்தில், திடீர் மரணமொன்று ஏற்படும் பட்சத்தில், எதிர்பாராத சுற்றாடல் பிரச்சினையொன்று.... )
  • கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்களுக்கு வீட்டிலிருந்து கடமை நிலையத்திற்கு சமுகமளித்தல், திரும்பிச் செல்லுதல், கடமையினிமித்தம் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அல்லது கடமை நிலையத்தில் வைத்து திடீர் விபத்து ஏற்படுதல்,
  • மாணவரோடு தொடர்புடைய விசேட நிகழ்வுகள்.
  • பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளும் விழாக்களும்.
  • பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் வெளிநாட்டு லீவு பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
  • பாடசாலையின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணிக்குழு உறுப்பினர்கள் முழு நேர கற்றல் விடுகையைப் பெற்றுக் கொள்ளுதலும் மீண்டும் சமுகமளித்தலும்.
  • பாடசாலை ஆரம்பித்த நேரம் / முடியம்  நேரம் என்பவற்றில் மாற்றம் இருப்பின்.
  • அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு லீவில் செல்லும்/ லீவை முடித்து விட்டு மீண்டும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் கடமைப் பொறுப்பேற்கும் ஆசிரியர் தொடர்பான குறிப்பு
  • பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய திடீர் விபத்துக்கள் தொடர்பான குறிப்பு
  • அனுமதிக்கப்பட்ட பிரசவ லீவில் செல்லும் ஆசிரியைகள்/ பிரசவ லீவு முடிந்து சேவைக்குத் திரும்பும் ஆசிரியைகள் தொடர்பான குறிப்பு
  • பாடசாலை விடுதிகளில் குடியிருக்க அனுமதி பெற்ற கடிதக்குறிப்பு/ விடுதியை மீள ஒப்படைத்தல் பற்றிய குறிப்பு
இது போன்ற தகவலர்களைத் தொடர்ந்தும் பெற எமது வட்சப் குழுமங்களில் இணைந்துகொள்வதற்கு கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

.