க.பொ.த (சா.த) க.பொ.த (உ/த) புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் மற்றும் பாடசாலை விடுமுறை தினங்கள் குறித்து கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை இன்று (26) வௌியிட்டுள்ளது.
அந்த சுற்றுநிருபத்தின் அடிப்படையில் கீழ்வரும் தினங்களில் பரீட்சை நடைபெறும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை 2022.01.22
க.பொ.த (உ.த) பரீட்சை 2022.02.07 முதல் 2022.03.05
க.பொ.த (சா/த) பரீட்சை 2022.05.23 முதல் 2022.06.01
அத்துடன் கல்வி அமைச்சு பாடசாலை விடுமுறை தினங்களாக அறிவித்த விபரங்கள் கீழ்வருமாறு
01. நத்தார் விடுமுறை - 2021.12.23 முதல் 2021.12.26 வரை
அந்த அடிப்படையில் பாடசாலைகள் 2021.12.27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.
02. 2021 க.பொ.த (உ/த) பரீட்சை நடாத்வதற்காக விடுமுறை வழங்குதல் 2022.02.03 முதல் 2022.03.06 வரை
அந்த அடிப்படையில் 2022.03.07 ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பமாம்.
இந்த விடுமுறை பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளுக்கு வழங்கப்படமாட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
03. சிங்கள தமிழ் பாடசாலைகளின் பாடசாலை தவணையினை பூர்த்திசெய்தல்.2022.04.08 ஆகும்
அந்த அடிப்படையில் 2022.04.09 முதல் 2022.04.17 வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.
சிங்கள தமிழ் பாடசாலைகளின் புதிய தவணை 2022.04.18 ஆம் திகதி ஆரம்பமாகும்.
04. முஸடலிம் பாடசாலைகளின் பாடசாலை தவணையினை பூர்த்திசெய்தல்.2022.04.01 ஆகும்
அந்த அடிப்படையில் 2022.04.02 முதல் 2022.05.03 வரை விடுமுறை வழங்கப்படுகின்றது.
சிங்கள தமிழ் பாடசாலைகளின் புதிய தவணை 2022.05.04 ஆம் திகதி ஆரம்பமாகும்.
05. க,பொ.த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களின் தவணையானது 2021.04.18 அம் திகதியுடன் முடிவடைகின்றது எனினும் அவர்களுக்கு செயலமர்வுகள் ஏற்பாடுசெய்தல் ஊடாக அல்லது ஏதொ ஒரு வழியில் மீட்டல் வகுப்புக்கள் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதாக அறிவிக்கப்படுகின்றது.