க. பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2020 பெறுபேறுபேறுகளைப் பெற்று தங்களது அடுத்த கட்ட நகர்விற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக கண்டி த யங் பிரண்ட்ஸ் அமைப்பின் கல்வி ஊக்குவிப்பு வாரம் என்ற பெயரில் இலவச கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்ளப்பட்டிருக்கின்றது. !
Kandy The Young Friends அமைப்பானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கண்டி மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறுபட்ட கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதி உயர்தரத்திற்கு தெரிவாகின்ற மாணவர்கள் மற்றும் சித்தியடையாத மாணவர்களுக்கு "வெற்றியை நோக்கி" என்ற தொனிப்பொருளில் நடாத்தப்படுகின்ற கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை அவற்றில் முக்கியமான நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியை இம்முறை "கல்வி ஊக்குவிப்பு வாரம்" என்ற தலைப்பின் கீழ் தொடர்ந்து 5 நாட்களுக்கு zoom வழியாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு துறை குறித்தும் விரிவான தகவல்கள் பகிர்ந்து கொள்ளுமுகமாக பிரத்தியேகமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த துறையில் Role Model களையும் அறிமுகம் செய்து அவர்களது அனுபவங்களையும் பகிரப்படவிருக்கின்றது.
________________
நிகழ்ச்சி ஏற்பாடுகள் பின்வரும் ஒழுங்கின் கீழ் நடைபெறவுள்ளது.
முதல் நாள் (10.10.2021)
உங்களுக்கு விருப்பமான துறை எது என்பதை கண்டறிவதற்கான நுட்பங்கள்.
உயர்தரம் தெரிவானவர்கள் அடுத்த இரண்டாண்டுகளை கல்விக்காக திட்டமிடுவதற்கான வழிகாட்டல்கள்.
இரண்டாவது நாள் (11.10.2021)
கலைப் பரிவு மற்றும் வர்த்தகப் பிரிவுகளுக்கான பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.
மூன்றாவது நாள் (12.10.2021)
விஞ்ஞானப் பிரிவு மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான பாடத் தெரிவு தொடர்பான வழிகாட்டல்கள்.
நான்காவது நாள் (13.10.2021)
தொழில் நுட்பப் பிரிவுக்கான பாடத் தெரிவு மற்றும் கல்வியல் கல்லூரியில் நுழைந்து ஆசிரியர்களாகவேண்டும் என இதிர்பார்ப்பவர்கள் அதற்காக தங்களது தகுதிகளை அமைத்து தயாராகுதல் தொடர்பான வழிகாட்டல்கள்.
ஐந்தாவது நாள் (14.10.2021)
சாதாரண தரப் பரீட்சை சித்தியடையாத மாணவர்களகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கானது...
உயர்தரம் கற்க போதிய பெறுபேறு இல்லை என்பது உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ள ஒரு தடையல்ல என்ற தலைப்பிலான வழிகாட்டல்கள்.
பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 13 வருட கட்டாயக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்த சில தெளிவுகள்.
தொழிநுட்பத் துறைகளில் இலங்கை மற்றும் சர்வதேச ரீதியாக இருக்கின்ற வாய்ப்புக்கள் பற்றிய தகவல்கள்.
________________
தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில் இலங்கையில் எந்தப் பகுதியிலிருந்தும் zoom ஊடாக இணைந்து பயன்பெறலாம்.
குறித்த நிகழ்ச்சி The Young Friends பேஸ்புக் பங்கங்களினூடாக live ஒளிபரப்பாகும். நிகழ்ச்சிக்கான அனுசரணையை செரண்டிப் கல்வி நிறுவனம் (SEF) வழங்குகின்றது.
இணைந்து கொள்ள விரும்புகின்ற மாணவர்களும், பெற்றோரும் பின்வரும் WhatsApp link களில் இனைந்து மேலதிக நகல்களை பெறலாம். அல்லது The Young Friends பேஸ்புக் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
(கீழுள்ள WhatsApp குழுமங்களில், இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பெறுபேறு பெற்ற மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் மாத்திரம் இணையலாம் அதன் ஊடாக நீகழ்ச்சிக்கான லிங்குகள் பகிரப்படும்)
0 Comments