தேசிய கல்வி நிறுவகத்தின் ஆசிரியர் கல்வித்துறையினால் நடாத்தப்படும் மேற்படி கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்குரிய தகைமைகள்
* க.பொ.த உயர்தரத்தில் குறைந்தபட்சம் 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும், அத்துடன்
• அரச பாடசாலை அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் / பிரிவேனா பாடசாலைகளில் கடமைபுரியும் பரிவேனாதிபதி, ஆசிரியர்கள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பாடநெறியின் இயல்பு
* சிங்கள மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு தமிழ் கற்கைநெறியும்,
தமிழ் மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு சிங்கள கற்கைநெறியும்
சிங்கள, தமிழ், மொழிமூல விண்ணப்பதாரிகளுக்கு ஆங்கிலக் கற்கைநெறியும் நடாத்தப்படும்.
* நிகழ்நிலை மூலமாக (Online) கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
பாடநெறியின் காலம்
* கற்கைநெறியின் காலம் ஒரு வருடம்
• வார இறுதி நாட்களில் நடாத்தப்படும் பகுதிநேர பாடநெறியாகும்.
பாடநெறிக் கட்டணம்
* விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ 500/-, பதிவுக் கட்டணம் ரூ 1000/- பாடநெறிக் கட்டணம் ரூ. 30000/- (இரு தவணைகளில் ரூ 15000/- வீதம் செலுத்தலாம்)
• நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும் இறுதிப் பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
2021.ஓக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் லிங்கை கிளிக் செய்து Google
படிவத்தினைப் பூரணப்படுத்துவதன் ஊடாக விண்ணப்பத்தினைச் சமர்ப்பிக்கவும்.
0 Comments