கொவிட் தொற்று ஏற்பட்டு வைத்திய கண்காணிப்பின் கீழ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டதற்காக அக்ரஹார காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அந்த அடிப்படையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட அங்கத்தவர்களுக்கு மாத்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள காப்புறுதித் திட்டத்திற்கு அமைய உயர்ந்தபட்சம் 10 தினங்களுக்கு காப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கான அனுமதி கிடைத்திருக்கின்றது.
அக்ரஹார காப்பீடு என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? இழப்பீடுகள் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும்? போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும் அக்ரஹார விண்ணப்பப்படிவம் என்பவற்றை பதிவறக்கம் செய்ய கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யுங்கள்
அதற்காமைய காப்பீட்டுத் தொகையினைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்புகின்ற அக்ரஹார அங்கத்தவர்கள் உரிய அக்ரஹார இழப்பீடு கோரும் விண்ணப்பங்களுடன் கீழ்க்குறிப்பிடப்படும் ஆவணங்களை நிறுவனத் தலைவரின் ஊடாக சான்றுறுதிப் படுத்தி சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகின்றது.
01. பூரணப்படுத்தப்பட்ட அக்ரஹார விண்ணப்பப்படிவம்.
02. வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக குறித்த சுகாதார வைத்திய சேவை அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்ட நோய் குறித்து குறிப்பிடும் அறிக்கையின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட பிரதி. (குறித்த அறிக்கையில் சிகிச்சை ஆரம்பமாகும் திகதி மற்றும் சிகிச்சை முடிவடையும் திகதி என்பன தௌிவாகக் குறிப்பிடப்படலேண்டும்.
03.PCR அல்லது Antigen பரிசோதனை அறிக்கையின் சான்றுறுதிப்படுத்தப்பட்ட பிரதி
0 Comments