2021 ஒக்டோபர் 1ம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு "சிறுவர் தொழிலை இல்லாது ஒழிப்போம்" எனும் கருப்பபொருளில் குறுந்திரை ஆக்கப்போட்டியொன்று தொழில் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் குறுந்திரைப்படம் ஆகக்கூடியது 5 நிமிடங்களாக அமைய வேண்டும். அத்துடன் போட்டியாளர்களின் பெயர் மற்றும் ஏனைய தகவல்கள் உள்ளடக்கப்படக்கூடாது.
இக் குறுந்திரைப்படத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித்திகதி 17 செப்டம்பர் 2021 ஆகும்.
ஆக்கங்கள் சமர்ப்பிப்பவர்கள் 20 ஆகஸ்ட் 2021 இற்கு முன்னர் பதிவு செய்திருக்க வேண்டும். கீழ்க்குறிப்பிடும் லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.
0 Comments