தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நிருவாகம் மற்றும் அபிவிருத்திதுறை மூலம் நடாத்தப்படும் மேற்படி பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பாடநெறி நடாத்தப்படும் நிலையம்
கல்வி நிருவாகம் மற்றும் அபிவிருத்தி துறை கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ பீடம் தேசிய கல்வி நிறுவகம், மீப்பே சந்தி, பாதுக்க.
| பாடநெறி கால எல்லை
இரண்டு வருடங்கள் (வார இறுதி நாட்களிலும் மற்றும் அவசியமேற்படின்
வாரநாட்களில் மாலை 6.00 மணிக்குப் பின்னர் விரிவுரைகள் இடம்பெறும்)
மொழி மூலம்
சிங்களம் தமிழ்
பாடநெறிக் கட்டணம்
ரூபா 150,000.00 (இரு தடவைகளில் செலுத்த முடியும்) பதிவுக் கட்டணம் ரூபா
5,000.00 + பரீட்சைக் கட்டணம்
2021 நவம்பரில் பாடநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள்:
(i) கல்விமாணிப் பட்டம் அல்லது ஏதேனும் பாடத்துறையுடன் தொடர்புபட்ட முதல் பட்டத்துடன் கல்வி பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா பயின்றிருத்தலுடன்
(ii) இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES) இலங்கை அதிபர் சேவை (SLPS) இலங்கை
ஆசிரிய ஆலோசகர் சேவை (SLTAS) இலங்கை ஆசிரியர் சேவை (SLTS)
அல்லது
கல்வி அமைச்சுடன் இணைந்த வேறும் கல்வித் தாபனங்களில்
தலைவராக பணிபுரிபவராக இருத்தல்
அனுமதி முறை:
• நேர்முகப் பரீட்சை மூலம் அல்லது நுழைவுப் பரீட்சையுடன் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும். நுழைவுப் பரீட்சை 02 மணித்தியால கல்வி பற்றிய பொது விடயங்களைக் கொண்டதும், 01 மணித்தியால உளச்சார்பு வினாப்பத்திரமுமாக 2 வினாப் பத்திரங்களைக் கொண்டமையும்.
. விண்ணப்பிக்கப்படும் காலப் பகுதியில் விண்ணப்பதாரி தேசிய கல்வி நிறுவகத்தில் வேறு எந்தவொரு முழு நேர பகுதி நேர பாடநெறிகள் எதுவும் மேற்கொள்ளாதவராயும் வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர பாடநெறி எதையும் மேற்கொள்ளாதாவராயும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை:
1. தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூரவ இணையத்தளமான (www.nie.lk/
olcmed2app21.aspx) உள்ள நிகழ்நிலை படிவத்தை (online Form) நிரப்புவதன்
மூலம் மற்றும்
2. தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.nie.lk/
naddpage.aspx) ஆங்கில மொழியிலுள்ள விண்ணப்பப்படிவத்தில் நிறுவனத் தலைவரின் சிபாரிசுடன் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகத்தின்
பெயரிலான இலங்கை வங்கிக் கணக்கு 7041168க்கு எந்தவொரு இலங்கை வங்கி
கிளையிலும் விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1,500/- வைப்புச் செய்தல் அவசியம்.
கட்டண ரசீதை நிரப்பும் போது விண்ணப்பதாரியின் பெயர் மற்றும்
MEd. (Education Management) எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.குறித்த ரசீதை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து பணிப்பாளர் கல்வி நிருவாகம்
மற்றும் அபிவிருத்தி, கல்வித் தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவப் பீடம் | தேசிய கல்வி நிறுவகம் மீப்பே சந்தி, பாதுக்கே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில்2021 செப்டம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைத்தல் வேண்டும்.
விண்ணப்பப் பத்திரம் அனுப்பப்படும் கடித உறையின் மேல் இடது பக்க மூலையில் | MEd (Education Management) 2021/2022- (சிங்களம்/தமிழ்)
எனக் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்காக விண்ணப்பப்படிவ கட்டணம்
மீளச்செலுத்தப்படமாட்டாது.
. மேலதிக விபரங்கள் வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி
வரையிலான கால எல்லையில் பின்வரும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு
0 Comments