18 வயது பூர்த்தியான அனைவரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ளல்
ஏற்கனவே பதிவ செய்தவர்கள் தங்களது பதிவுகளை மாற்றியமைத்தல்
ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களைத் திருத்தியமைத்தல் என்பவற்றுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுகின்றது.
அத்துடன் eservices@election.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக இது தொடர்பான சந்தேகங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் வினவலாம்.
பதிவு செய்தல் தொடர்பான வழிகாட்டல் கீழே தரப்படுகின்றது.
01. இணையத்தளத்தில் பிரவேசித்தல்.
02. கணக்கு ஒன்றினை ஆரம்பித்தல்
03. தகவல்களை வழங்குதல்
இங்கு பாஸ்வேர்ட் (Password ) வழங்கும் போது 'Simple Letter', 'Capital Letter', 'Number', 'Special Charactor' என்பவற்றைச் சேர்த்து 6 முதல் 20 வரையான எழுத்துக்களை வழங்கவேண்டும்.
04. வழங்கிய தொலைபேசி இலக்கத்திற்கு வருகின்ற இரகசிய இலக்கத்தை உட்செலுத்தவும்.
05. உருவாக்கிய கணக்கின் ஊடாக பதிவு செய்கின்ற தளத்திற்கு பிரவேசித்தல்
06. உட்பிரவேசித்த பின்னர் நீங்கள் பதிவு செய்தவராயின் உங்களது பெயர் காட்டும். சரி பார்க்கவும் என்னற பகுதியை அழுத்தினீர்களாயின் உங்களது தகவல்கள் பூரணமாக அது காட்டும்.
குறிப்பு; தெரிவு செய்கின்ற மொழியிலேயே பூரணப்படுத்த வேண்டும். தேசிய அடையாள அட்டையில் உள்ள விதத்திலேயே பெயர்கள் குறிப்பிடப்பவேண்டும்.
07. அடுத்து உங்களது தகவல்கள் முமுவதையும் கீழ் வரும் அடிப்படையில் காட்டும். அதில் மாற்றங்கள் ஏதும் இருப்பின் அவங்கை திருத்தி அமைக்கலம். புதிதாக பதிவு செய்பவர்கள் தரப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தகவல்களைப் பூரணப்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.
ஒன்லைன் பதிவு தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்
0 Comments