>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
HomeAptitude_TestAptitude Test - Jaffna university - music/ Dance/ Art & Design- degree - 2022/2023

Aptitude Test - Jaffna university - music/ Dance/ Art & Design- degree - 2022/2023

Admin September 07, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை
இராமநாதன் நுண்கலைக்கழகம்
பல்கலைக்கழக அனுமதி–2022/2023





உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)
நுண்கலைமாணி– கர்நாடகசங்கீதம்
நுண்கலைமாணி– நடனம்
நுண்கலைமாணி- சித்திரமும் வடிவமைப்பும்


மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 07.09.2023 தொடக்கம் 19.09.2023 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்

அனுமதிக்கான தகைமைகள்

கர்நாடகசங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறிகளில் யாதேனுமொன்றைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் தெரிவு செய்ய விரும்பும் பாடநெறிக்குரிய பாடத்தில் அதாவது கர்நாடகசங்கீதம் அல்லது நடனம்-பரதம் அல்லது சித்திரக்கலையில் ஆகக் குறைந்தது திறமைச் சித்தியும் (C), மற்றைய இரண்டு பாடங்களிலும் ஆகக் குறைந்தது சாதரண தரச் சித்தியும் (S) பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்.

தகுதிகாண் பரீட்சை ஆற்றுகை/ உளச்சார்பு பரீட்சை

மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் ஆற்றுகைப் பரீட்சை உளச்சார்பு பரீட்சைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தோற்றுதல் வேண்டும்.

கர்நாடகசங்கீதம்/ நடனம்- பரதம் – ஆற்றுகை பரீட்சை

சித்திரமும் வடிவமைப்பும் – செய்முறை மற்றும் எழுத்துப் பரீட்சை

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

 Online Application – Apply Now

விண்ணப்பதாரிகள் மேலுள்ள இணைப்பினூடாக விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (online) 19.09.2023  ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டு க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும், பரீட்சைக் கட்டணத்தினை மேற்கொண்ட பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொள்ளுதல் அவசியமானது.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கையெழுத்திட்டு க.பொ.த உயர்தர பெறுபேற்று பத்திரத்தின் பிரதி மற்றும் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்து உதவிப்பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘சங்கீதம்/நடனம்/சித்திரமும் வடிவமைப்பும் 2022/2023’  என விண்ணப்பிக்கும் கற்கை நெறியைக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பித்தல் வேண்டும்.

நுழைவு அனுமதித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு ஆற்றுகை/ நேர்முகப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அவர்களினால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கட்டணவிபரம்



இலகற்கைநெறிமக்கள் வங்கிக் கணக்கிலக்கம்விண்ணப்பக் கட்டணம்
1கர்நாடகசங்கீதம்0400024000016221000.00
2நடனம்- பரதம்0400024000016301000.00
3சித்திரமும் வடிவமைப்பும்0400024000016482,600.00

மேற்படி தகுதிகாண் பரீட்சைக்கான கட்டணத்தினை ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில், மேற்குறிப்பிட்டவாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளை கணக்கு இலக்கத்திற்கு செலுத்தி இருத்தல் வேண்டும்.

அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொலைபேசி எண்- 021 222 6714, மின்னஞ்சல் முகவரி- ar.admissions@yahoo.com மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

 

பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Aptitude Test என்றால் என்ன? எதற்காக நடாத்ப்படுகின்றது? யாருக்காக நடாத்தப்படுகின்றது? அதன் நடைமுறகைள் என்ன என்பது குறித்த தௌிவினைப் பெற்றுக்கொள்வதற்கு இங்கு கிளிக் செய்யவும். 

Tags:
Aptitude_Test
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template