>

ad

விழா முற்பணக் கடன் தொடர்பாக தாபன விதிக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்



விழா முற்பணம் தொடர்பில் தாபன விதிக்கோவையின் XXIV அதத்தியாத்தில் 13 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

13.1 இந்த கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள் - 

 நிரந்தர, தற்காலிக அல்லது அமய அரசாங்க உத்தியோகத்தர்கள்  தகுதியானவராவார்.  தற்காலிக அல்லது அமய ஊழியர் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் வேலை செய்திருக்கும் நிலையில் இந்த கடனை அறவிடுகின்ற காலங்களில் பணியாற்றுவார் என்றிருப்பின் அவர்களும் தகைமை பெறுவர். பதவி நிலை உத்தியொதகத்தரும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
  
13:2  உத்தியோகத்தரின் விருப்பத்தின் பிரகாரம் ஏதேனுமொரு வருடாந்த 
விழாவுக்காக 10,000.00  ரூபாவை முற்பணமாக வழங்க முடியும். இந்த முற்பணத்திற்கு வட்டி அறவிடப்படமாட்டாமது. (அ..நி சு 21/2015)


13:3இதற்கு பிணையாளர்கள் தேவையில்லை. 

13:4  - விழா நடைபெறவுள்ள தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இதனை செலுத்தக் கூடாது. (சிவனொளிபாதமலை யாத்திரை, ரமழான் போன்ற) ஒரு நீண்டகாலம் வரை வியாபித்துள்ள ஒரு விழாவாயின், முந்திய ஆண்டிலே அவ்விழாவிற்காக அம்முற்பணம் வழங்கப்பட்ட திகதிக்கு இரு வாரங்களுக்கு முன்னர் இதனைச் செலுத்த முடியும்.
 
13:5 இந்த முற்பணத் தொகையை 8 மாதத் தவணைகளில் அல்லது, தேவையாயின், அதற்கு முன்னர் மீள அறவிட்டுக்கொள்ளல் வேண்டும். அதற்கு முன்னர் சேவை முடிவடையுமாயின் அப்போது அறவிடப்படுகின்ற அடுத்த அறவீடுகளுடன் இதுவும் அறவிடப்படவேண்டும் (அ..நி சு 21/2015)

இந்த முற்பணத்தினைப் பெறுவதற்காக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்.


பாடசாலைகளில் பணிபுரிபவர்களாயின் இந்த முற்பணம் தேவைப்படுபவர்களது பட்டியல் ஒன்று அதிபர் மூலமாக வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும். அந்தப் பட்டியலுக்கு அமைய கடன் தொகை பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்படும்.

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்களது அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் உரிய விண்ணப்பப்டிவத்தினை பூரணப்படுத்தி பெற்றுக்கொல்லாம்.