>

ad

Sub Station Master (Contract Basis) 2021 – Sri Lanka Railway Department- with Tamil job Application

உப புகையிரத நிலைய அதிபர் பதவி (ஒப்பந்த)

இலங்கை புகையிரதசேவைகள் திணைக்களம்



இந்தப் பதவி நிரந்தரமானதல்ல என்பதுடன் ஒப்பந்த அடிப்படையிலேயே ஆட்கள் சேரத்துக்கொள்ளப்படுகின்றனர். இந்தப் பதவியன் ஊடாக எந்த விதமான நிரந்தரப்பதவியும் கிடைக்கப்பெறும் என்பதாக உறுதியளிக்கப்படவில்லை. அத்துடன் சேவைக்கான நிபந்தனைகள் பலவும் குறிப்பிடப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க இருப்பவர்கள் தொழில் குறித்த அறிவித்தலை முழுமையாக வாசித்துவிட்டு விண்ணப்பிக்கவும். 


பதவிக்காக கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படும்.  மாதம் ஒன்றிற்கு ஆகக்குறைந்த கொடுப்பனவு 15,329.00 ஆகும்.

விண்ணப்பமுடிவுத் திகதி 2021.04.27

அதன்விபரம்.-
அந்த புகையிர நிலையத்தில் பெறப்படுகின்ற வருமானத்தின் அடிப்படையில் தரகுப்பணம் வழங்கப்படும். ஒருநாளைக்கு வருமானம் வராத போதிலும் 310 ரூபா தரகுப்பணம் கிடைக்கப்பெறும். மாதம் ஒன்றிற்கு இவற்றின் கூட்டுத்தொகை 10,000 ரூபாவுக்கு குறைவாக அமையுமாயின் 10,000 ரூபா தரகுப்பணம் வழங்கப்படும். அத்துடன் 5329 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்ப்படும்

இந்தப் பதவிக்காக ஆண்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்.

வயதெல்லை 18 முதல் 45 வயது வரை

கல்வித் தராதரம்.- க. பொ. த. (சா/ தரப்) பரீட்சையில் சிங்களம்/ தமிழ/ ஆங்கிலத்துடன் கணிதம் உட்பட நான்கு பாடங்களில் சிறப்பு சித்தியுடன் ஆறு விடயங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

பதவி வெற்றிடம் காணப்படுகின்ற புகையிரத நிலையங்கள்.




விண்ணப்பதாரி குறிப்பிட்ட உப புகையிரத நிலையத்திலிருந்து 20 கி. மீ. தூரத்திற்குள் (நேரடி தூரம்) குறைந்தது 05 வருட காலம் நிரந்தர வதிவுடையவராக இருத்தல் வேண்டும்.

போட்டிப் பரீட்சை மூலமே தெரிவு செய்யப்படுவர்.

பரீட்சைக் கட்டணம். 500/=

விண்ணப்பப்படிவத்தை முன்வைத்தல்.- 

தட்டச்சு கடதாசி அளவுள்ள (ஏ-4) கடதாசியில் விண்ணப்பதாரியினாலேயே விண்ணப்பப்பத்திரம் தயாரிக்கப்பட வேண்டும். விண்ணப்பப்பத்திரத்தை இட்டு அனுப்பும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ''உப புகையிரத நிலைய அதிபர் பதவிக்கான விண்ணப்பப் படிவம்"" எனக் குறிப்பிட்டு புகையிரத முகாமையாளர் த. பெ. இலக்கம் 355, புகையிரத முகாமையாளர் அலுவலகம், கொழும்பு - 10 எனும் முகவரிக்கு 2021.04.27 ஆந் திகதி அல்லது அதற்கு முன்பு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்தல் வேண்டும். ( விண்ணப்பப்படிவம் கீழ் லிங்கில் தரப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்..)


Advertisement Tamil Download
Application TamilDownload

      முகநூல் குழுமம்

      www.facebook.com/LankaJobinfocom-157301272736519


எ       எமது வட்சப் குழுமங்கள்