ad

Post of Co-operative Development Officer - Northern Province - 2021 - government job in Jaffna

கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்

வடக்கு மாகாணம்






வடக்கு மாகாண பொதுச்சேவையின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III  இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெற்றிடங்களின் எண்ணிக்கை -  22

விண்ணப்ப முடிவுத்திகதி 31.03.2021. 

தகைமைகள்

விண்ணப்பதாரி க.பொ.த (சா.த)பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ்/ சிங்களம்/ ஆங்கிலம், கணிதம்ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்

விண்ணப்பதாரி க.பொ.த (உ.த) பரீட்சையில் பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் மற்றும் வணிகக் கல்வி  ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் (பொது வினாத்தாள் நீங்கலாக) ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின் ஓரே அமர்வில் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)

05.2 தொழில்சார் தகைமைகள் :-

விண்ப்பதாரி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவு அபிவிருத்திக்கான தேசிய நிறுவனத்தினால் நடாத்தப்படும் உயர் கணக்கியல் (Higher Accountancy) கணக்காய்வு Auditing) 
முகாமைத்துவம்  (Management) ஆகிய கற்கை நெறிகளில் ஒன்றில் டிப்ளோமா 

அல்லது 

வட மாகாண கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்படும் கூட்டுறவு அபிவிருத்தி தொடர்பான  உயர் மடட் கற்கைநெறியில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

விண்ணப்பதாரி இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் (Assosiation of Accounting Technician – AAT) இறுதி மடட் த்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் அல்லது உள்நாட்டில் அமைந்துள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் கணக்கியல் அல்லது
முகாமைத்துவத்தில் டிப்ளோமாவினைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அல்லது

இலங்கை பட்டயகக் ணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்படும் பட்டயக்கணககாளர் பரீட்சையில் (Chartered Accountancy Examination)  இடைநிலைத்தரத்தில் (intermediate ) சித்தியடைந்திருத்தல்
வேண்டும்

அல்லது

தேசிய உயர் தொழில்நுடப் கல்லூரியிலிருந்து கணக்கீடு தொடர்பான 04 வருட உயர் டிப்ளோமா சான்றிதழ் HNDA பெற்றிருத்தல் வேண்டும்

அல்லது

தேசிய உயர் தொழில்நுடப் கல்லூரியிலிருந்து வணிக நிர்வாகம் தொடர்பான 03 வருட உயர் டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். 


மேலதிக விபரங்களை டவுன்லோட்  செய்துகொள்ளலாம்.

Circular : Tamil / Sinhala
Application : Tamil / Sinhala

Source : www.np.gov.lk


NVQ  தகைமை என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள  கீழ்குறிப்பிடப்படுகின்ற லிங்கில் உள்ள கட்டுரையை வாசிக்கவும் 




lankajobinfo.com எமது முநூல் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள் 

https://web.facebook.com/LankaJobinfocom-157301272736519

அல்லது  வட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள்.