தற்போது அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தயோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கான பரீட்சையினை நடாத்துவதற்கான முயற்சிகளை கல்வி அமைச்சு மற்றும் பெது நிர்வாக அமைச்சு என்பன மேற்கொண்டு வருகின்றன.
1. வேலை இல்லாத பட்டதாரிகள் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
2. இந்தப் பரீட்சையில் வழங்கப்படுகின்ற வெட்டுப்புள்ளியிலும் அதிகமான புள்ளிகளைப் பெறுகின்ற அனைவரும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா?
3. ஆசிரியர் சேவைக்காக மேல் மாகாணத்திலும் தென் மாகாணத்திலும் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இந்த மாகாணங்களில் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட பரீட்சைகள் தொடர்பில் என்ன முடிவு மேற்கொள்ளப்படும்.?
4. அதே போன்று ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மத்திய அரசின் கீழ் (தேசிய பாடசாலைகளுக்கு) ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை நடைபெறாதா?
5. தற்போது பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் குறித்த அதே பாடசாலையில் நிலவுகின்ற வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவார்களா?
6. ஆசிரியர் கற்பிக்கின்ற பாடங்களுக்கு அமைய வெற்றிடங்களின் அளவு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமா?
7. உயர்ந்தபட்ச வயதெல்லை நிர்ணயிக்கப்படுமா? உயர்ந்தபட்ச வயதெல்லை யாது?
இது போன்ற பல வினாக்கள் பட்டதாரிகளிடமிருந்து கிடைக்கப்பெறுகின்றன.
அத்துடன் இந்த பரீட்சைக்கான வகுப்புக்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அத்துடன் மேற்படி வினாக்களுக்கு விடைகளை வழங்குவதற்கு பல பக்கங்களில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அவைகள் வருமாறு
தற்போதளவில் கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகள் நாடாத்தப்பட்டுள்ளன. திறந்த பரீட்சைக்கான பெறுபேறுகள் வௌியிடப்ட்டுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்காக தற்போது சேவையில் இருக்கின்ற அதிபர்களும் ஆசிரியர்களும் தோற்றியிருக்கின்றர். குறித்த மட்டுப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கல்வி அமைச்சின் SLTES கிளையில் வைத்திருப்பதாக அறியக்கிடைக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் வௌியிடாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து சிந்தித்தாகவேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
அது மாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் குறித்தும் நாட்டின் இஸ்தீரத் தன்மை குறித்து மத்திய வங்கியின் அறிக்கை குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2015 ல் (என நினைக்கின்றேன்) இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை நடாத்தப்பட்டு ஆட்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் விண்ணப்பம் கோரி பின்னர் திருத்தப்பட்டு 2021 ஆம் ஆண்டில் கல்வி நிர்வாக சேவைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
கல்வி அமைச்சின் தகவல்களுக்கு அமைய இந்த மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நடாத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக இருக்கின்ற போதிலும் பரீட்சையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது.
2022.12.31 ஆம் திகதி ஆகும் போது அதிபர்கள், கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அதிக அளவினர் ஓய்வு பெற்றுச் செல்ல இருக்கினறர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
கௌரவ கல்வி அமைச்சரின் அறிவித்தலுக்கு அமைவாக நோக்கும் போது அதிபர் சேவையில் பாரிய வெற்றிடங்கள் காணப்படுவதாக அறிய முடியகின்றது. அதிபர்களை சேவையில் இணைத்துக் கொள்ளல் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு அதிபர் பரீட்சைக்குக் தோற்றியவர்களில் சிலர் நீதிமன்றத்தை நாடிச் சென்றிருக்கின்றனர். நீதி மன்றத்தின் ஒப்புதலுடன் குறித்த பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு கல்வி அமைச்சர் முயற்சிக்கின்றார் என்பதாகவும் தெரியவருகின்றது.
அதன் அடிப்படையில் குறித்த பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய அனைவருக்கும் அதிபர் நியமனம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுதாக ஊகிக்க முடிகின்றது.
எனவே கல்விக் கட்டமைப்பை பேணவேண்டுமாயின் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள். கல்வியல் கல்லூரி விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் போன்ற பதவிகளுக்காக ஆட்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும்.
அதன் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்ட வினாக்களுக்கு அனுமானிக்கின்ற அடிப்படையிலான விடைகள் இங்கு தரப்படுகின்றது.
1. வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும்வரை சரியாகக் குறிப்பிடமுடியாது. மேலே குறிப்பிட்ட காரணிகளை நோக்கும் போது வேலையில்லாத பட்டதாரிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதாகவே அனுமானிக்க முடிகின்றது.
2. இல்லை
வெற்றிடங்கள் காணப்படுகின்ற பாடங்களின் அடிப்படையிலேயே விண்ணப்பம் கோருவதற்கான அறிவித்தல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். உதாரணமாக கணிதப் பாடத்திற்காக காணப்படுக்னிற வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலை மட்டத்தில் அல்லது வலய மட்டத்தில் வெற்றிடங்கள் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டு விண்ணப்பம் கோரப்படும்.
பொதுவாக ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகளை பெறுமிடத்து சித்தியடைந்தவர்களாகக் கருதப்படலாம். எனினும் இணைத்துக் கொள்கின்ற செயற்பாடானது பாடங்களின் அடிப்படையில் காணப்படுகின்ற வெற்றிடங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும்.
உதாரணமாக ஒரு வலயத்தில் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் 500 காணப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதற்காக 2000 பேர்கள் விண்ணப்பித்து அவர்கள் அனைவருமே 40 புள்ளிகளிலும் அதிகமான புள்ளிகளைப் பெற்றிருப்பினும் அவர்கள் புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டு அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 500 பேர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். ,அதிலும் இறுதி புள்ளிகளை ஒரே அளவில் அதிகமானவர்கள் பெற்றிருப்பின் அதிலும் குறைந்த அளவில் காணப்படுகின்ற தொகையினரே இணைத்துக்கொள்ளப்பட வேண்டம். (அரச சேவைகள் ஆணைக்குழுவின் ஒங்குவிகளுக்கு அமைய) அதாவது 498 வது நிலையில் 55% புள்ளிகளைப் றெ்றவர்கள் நான்கு பேர் இருப்பார்களானால். 497 பேர்கள் மாத்திரமே நியமனம் பெறுவர்.
3. சில வேளைகளில் குறித்த பரீட்சைகள் நடைபெறலாம் குறித்த பரீட்சைகள் நடைபெறாமல் போவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது குறித்து அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொள்ளும்.
4. மேலே குறிப்பிட்ட 3 வது விடையை மீண்டும் பார்க்கவும்.
5. இல்லை, வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்களின் அளவு மற்றும் அவற்றுக்காக விண்ணப்பித்துள்ள விதம் என்பவற்றின் அடிப்படையில் இவைகள் மேற்கொள்ளப்படும்.
6. தாம் பட்டத்தினைப் பெற்றுள்ள பாடத்தின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும். தாங்கள் பட்டமாகப் பெற்றுள்ள துறையின் 1/3 பகுதியேனும் விண்ணப்பிக்கின் பாடத்துடன் தொடர்புபட்டதாக அமைய வேண்டும் என்பதாக அனுமானிக்கலாம். பட்டப்படிப்பு பாடநெறியில் பிரதான பாடங்கள் 3 காணப்படுமாயின் அதில் 1 பாடம் என்பதே 1/3 என்பதாகக் கருதப்படுகின்றது.
உதாரணமாக உயிரியல் விஞ்ஞானம் என்பது பிரதான பாடமொன்றாயின் சா/த விஞ்ஞானம் மற்றும் உ/த உயிரியல்' விஞ்ஞானம் என்பவற்றுக்காக விண்ணப்பிக்கலாம்.
7. ஆம் வயதெல்லை நிர்ணயிக்கப்படும். குறித்த வயதெல்லை எது என்பதனை வர்த்தமானி அறிவித்தல் வௌியாகும் வரையில் சரியாக குறிப்பிட முடியது.
இந்தப் பரீட்சைக்கான வகுப்புக்க்ள் குறித்து பலர் வினவுகின்றனர். குறித்த பரீட்சையின் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என்பதனை மனதில் கொள்ளவும்.
உபுல் நந்தன பெரேரா.
மொழிபெயர்ப்பு - லங்காஜொப்இன்போ.